Breaking Live : மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.. மாநிலங்களுக்கு மத்திய அரசின் திடீர் அறிவிப்பு..
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
ஐபிஎல் டி20 தொடரின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.90 ஆயிரம் கோடியை கடந்துள்ளது. இந்தாண்டு புதிதாக இணைந்த 2 அணிகள், ஐபிஎல் ஒளிபரப்பு தொகை மூலம் ரூ.90 ஆயிரம் கோடியை கடந்துள்ளது.
வரும் 25-ஆம் தேதி தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீன விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த மறுக்கும் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4-ஆக பதிவாகி உள்ளது. யுரேகா என்ற இடத்திற்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சிதறின.
Background

சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் கோவிட்-19-னால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணு மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்படுவது அதிகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.
சுகாதார துறை அமைச்சர் திடீர் ஆலோசனைக் கூட்டம்
மேலும் கொரோனா பாதிப்பு குறித்து, இந்தியாவில் மேற்கொள்ளும் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில், கொரோனா தொற்றானது குறைந்து கொண்டே வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150க்கு கீழே உள்ளது.
இந்தியாவில் தொற்று பாதிப்பும் குறைந்தே காணப்படுவதால், அரசும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. மேலும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் கொரோனா பாதிப்பு குறித்தான அச்சமின்றி மக்கள் வாழ ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார துறை, நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிக்காத வகையில், மத்திய அரசு வரும் நாட்களில் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -



