"குழந்தைகளுக்கு வேதங்கள், புராணங்களை கற்பிக்க வேண்டும்" ஜெகதீப் தன்கர் வேண்டுகோள்
நாட்டின் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், வரலாறு போன்ற அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு பிறந்தது முதல் கற்பிக்கப்பட வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பண்டைய கால நூல்களை எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும், சமகால சவால்களுக்குப் பொருந்தக்கூடியதாகவும் மாற்ற வேண்டும் என்றும் மாற்று மருத்துவ முறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் என்றும் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் என்ன பேசினார்?
கோவாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டுள்ள தேசமாக நமது நாடு உள்ளது. நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள மருத்துவ முறைகளை மீண்டும் கண்டறிந்து, அவற்றை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
மாற்று மருத்துவ முறையின் தாயகமாக இந்தியா இருப்பதால், மாற்று மருத்துவத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மாற்று மருத்துவ முறைகள் தற்போது மிகவும் விரிவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
நாட்டின் பண்டைய கால நூல்களை, நூலகங்களுக்குள் அடைத்து வைக்காமல், அவற்றை பரவலாகப் பயன்படுத்தும் நடைமுறைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நவீன அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி, புதுமை, மறு விளக்கம் போன்ற செயல்பாடுகள் மூலம் காலத்தால் அழியாத கருத்துக்களை உயிர்ப்புடன் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
"வேதங்கள், புராணங்களை கற்று தர வேண்டும்"
இத்தகைய விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும், சமகால சவால்களுக்குப் பொருந்தக்கூடிய முறையில் மாற்ற வேண்டும் என்றும் ஆதார அடிப்படையில் சரிபார்ப்பு, டிஜிட்டல் மயமாக்கல், மொழிபெயர்ப்புகள் மற்றும் பல்துறை ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டின் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், வரலாறு போன்ற அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு பிறந்தது முதல் கற்பிக்கப்பட வேண்டும். நமது நாட்டின் வலுவான நாகரிக அறிவு குறித்து எடுத்துக் கூற வேண்டிய தருணம் இது" என்றார்.
மஹரிஷி சுஷ்ருதா மற்றும் ஆசார்ய சரிகா ஆகியோரின் உருவச் சிலைகளை திறந்து வைத்த பின்னர், அங்கு கூடியிருந்தவர்களிடம் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், “அறிவை உருவகப்படுத்துபவர்களை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
சிரகா குஷான் அரசாட்சியில் சரகா ஒரு அரச மருத்துவராக இருந்தார். சரகா மருத்துவத்தின் தந்தை என்றும், அவர் சரகா சம்ருதா என்ற மருத்துவம் குறித்த நூலை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நூல் ஆயுர்வேத மருத்துவ முறைக்கான ஒரு அடிப்படை நூலாகும்.
மற்றொன்று, அறுவை சிகிச்சையின் தந்தையாகக் கருதப்படும் சுஷ்ருதா ஆவார். அவர் வரைந்துள்ள ஓவியங்களைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த காலங்களில் அறுவை சிகிச்சைக்கான கருவிகள், மிகவும் முற்போக்கான தன்மை கொண்டதாகவும், அதனை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சுஷ்ருதா தன்வந்தரியின் சீடராவார். தன்வந்திரி என்பவர் மற்றொரு புகழ்பெற்ற மருத்துவர் ஆவார். சரகா, சுஷ்ருதா ஆகியோரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் நம் அனைவருக்கும், குறிப்பாக, எளிதில் ஈர்க்கக்கூடியதாகவும், மனதிற்கு உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளன என்றும் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.





















