மத்திய மின்சார ஆணையம் (CEA) நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களின் (TPPs) நிலக்கரி இருப்பு நிலையை தினசரி அடிப்படையில் கண்காணித்து வருகிறது. 05.03.2023 நிலக்கரி கையிருப்பு இந்த அனல் மின் நிலையங்களில் சுமார் 34 மெட்ரிக் டன் உள்ளது. இது 12 நாட்களுக்கு இயக்க போதுமானது. இது மத்திய மின்சார ஆணையத்தால் வழங்கப்பட்ட நிலக்கரி இருப்பு விதிமுறைகளில் 50% ஆகும்.


இந்த கோடை காலத்தில், உச்ச தேவை சுமார் 230 ஜிகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோடை காலத்தில் உச்ச தேவையை பூர்த்தி செய்ய மின் அமைச்சகம் (MoP) பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது:


1. மின் அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம் (CEA), கோல் இந்தியா லிமிடெட் (சிஎல்எல்) மற்றும் சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான துணைக் குழு பல்வேறு செயல்பாட்டு முடிவுகளை எடுக்கத் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது.


2. அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்துதல் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு உறுதி செய்யவும், மின் துறை தொடர்பான ஏதேனும் அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்கவும் செயல்படுகிறது.  


3. ரயில்வே வாரியத்தின் தலைவர் அடங்கிய ஒரு inter ministeral committee (IMC) அமைக்கப்பட்டுள்ளது; அதில், நிலக்கரி அமைச்சகம், சுற்றுச்சூழல் துறை, வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், மின்துறை அமைச்சகங்களின் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். நிலக்கரி வழங்கல் மற்றும் மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதை கண்காணிக்க, நிலக்கரி வெவ்வேறு நிலையத்திற்கு பிரித்து அனுப்புதல் ஆகியவை இந்த குழு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


4. 20.02.2023 அன்று மின் அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில், மின்சாரச் சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளை இயக்கவும், அவற்றின் முழுத் திறனுக்கும் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.


5. அதேபோல் 09.01.2023 அன்று மின் அமைச்சகம் தரப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மத்திய/மாநில ஜென்கோஸ் மற்றும் இந்திய அனல் மின் நிலையங்களுக்கு 6% எடையில் கலப்பதற்காக கொள்முதல் மூலம் இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டால்  செப்டம்பர் 2023 வரை மின் உற்பத்தியில் தட்டுப்பாடு இருக்காது என கூறப்பட்டுள்ளது.


6. 2023 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என மின் அமைச்சகம் தரப்பில் அறிவுருத்தப்பட்டுள்ளது.


7. நெருக்கடி காலத்தில் (ஏப்ரல்-மே 2023) 18 நாட்களுக்கு சுமார் 5000 மெகாவாட் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு மின் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


2023-24 நிதியாண்டின் முதல் பாதியில் உள்நாட்டு நிலக்கரி விநியோக பற்றாக்குறையை சமாளிக்க NTPC அதன் நிலையங்களுக்கு சுமார் 5.4 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலையானது உள்நாட்டு நிலக்கரியின் விலையுடன் ஒப்பிட முடியாது, ஏனெனில் அது அதிக கலோரிக் மதிப்பைக் கொண்டுள்ளது.


இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலையானது, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கான சர்வதேச குறியீடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது அதாவது நிலக்கரி எந்த நாட்டிலிருந்து வரவழைக்கப்படுகிறது, கடல்வழி இறக்குமதிக்கான செலவுகள், காப்பீடு போன்ற காரணிகள் உள்ளடங்கும். இவை சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடு பொருத்து மாறுபடும். ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் அதன் தேவைக்கேற்ப நிலக்கரியை இறக்குமதி செய்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி உட்பட எரிபொருளின் விலை பொருத்தமான மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி உற்பத்தி கட்டணமாக மாற்றப்படுகிறது என மத்திய மின்துறை அமைச்சர்  ஆர்.கே. சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.