மேலும் அறிய

ISRO on Chandrayaan 4: சந்திரயான்-4; நிலவில் இடத்தை குறித்த இஸ்ரோ; லேண்டரின் பயணம் எப்போது.? வெளியான முக்கிய தகவல்

சந்திரயான் 4 திட்டத்தில் முக்கிய படியாக, நிலவில் லேண்டர் தரையிறங்குவதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டரின் நிலவுப் பயணம் குறித்து தெரிந்துகொள்வோம்.

சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சந்திரயான் 4 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்துகிறது. அதன் ஒரு முக்கிய படியாக, நிலவில் சந்திரயான் 4-ன் லேண்டரை தரையிறக்குவதற்கான இடத்தை கண்டிறிந்துள்தாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

சந்திரயான்-4 திட்டம்

ஏற்கனவே, இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம், வெற்றிகரமாக சந்திரனில் லேண்டரை தரையிறக்கி சாதனை படைத்தது இந்தியா. அந்த லேண்டர், நிலவின் தென்பகுதியில் தரையிறங்கியதோடு, அங்கிருந்து துல்லியமான படங்களை பூமிக்கு அனுப்பியது.

இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நிலவிலிருந்து மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு எடுத்து வருவதற்கான அடுத்தகட்ட பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. அந்த திட்டத்திற்கு சந்திரயான்-4 என இஸ்ரோ பெயரிட்டுள்ளது. அதோடு, வரும் 2028-ம் ஆண்டிற்குள் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்துவதை இலக்காகக் கொண்டு இஸ்ரோ களத்தில் இறங்கியுள்ளது. தற்போது சந்திரயான்-4 மூலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ள லேண்டர், சந்திரனில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும் கடினமான பணியை மேற்கொள்ளும்.

லேண்டர் தரையிறங்குவதற்கான இடம் தேர்வு

இந்த நிலையில், சந்திரனின் மேற்பகுதியில் லேண்டர் தரையிறங்குவதற்கான 4 இடங்களை தேர்வு செய்ததாகவும், அதில் ஒரு இடத்தை அடையாளம் கண்டுள்ளதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். Mons Mouton என அழைக்கப்படும் நிலவின் மேற்பகுதியில், MM-1, MM-3, MM-4 மற்றும் MM-5 ஆகிய நான்கு இடங்களை கண்டறிந்ததாகவும், அதில் லேண்டர் தரையிறங்குவதற்கான இடமாக MM-4 தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த MM-4-ஐ சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் "குறைவான ஆபத்து சதவீதம், சராசரி சாய்வு 5 டிகிரி, சராசரி உயரம் 5334 மீட்டர் மற்றும் 24 மீட்டர் முதல் 24 மீட்டர் வரையிலான அளவுள்ள ஆபத்து இல்லாத கட்டங்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "மோன்ஸ் மவுட்டன் பகுதியில் உள்ள நான்கு தளங்களும் உயர் தெளிவுத்திறன் கொண்ட ஆர்பிட்டர் உயர் தெளிவுத்திறன் கேமரா (OHRC) மல்டி வியூ இமேஜ் டேட்டாசெட்களைப் பயன்படுத்தி, நிலப்பரப்பு பண்புகளை பொறுத்து முழுமையாக வகைப்படுத்தப்பட்டன," என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சந்திரயான்-4, ஒரு உந்துவிசை தொகுதி (PM), ஒரு இறங்கு தொகுதி (DM), ஒரு அசென்டர் தொகுதி (AM), ஒரு பரிமாற்ற தொகுதி (TM) மற்றும் ஒரு மறுநுழைவு தொகுதி (RM) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. DM மற்றும் AM ஒருங்கிணைந்த அடுக்கு, நியமிக்கப்பட்ட இடத்தில் சந்திரனின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கும்.  லேண்டரின் அனைத்து கட்டுப்பாடுகளையும் பூர்த்தி செய்யும் ஒரு தரையிறங்கும் தளத்தின் சரியான தேர்வின் மூலம், பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சபரிமலை: மாதவிடாய் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து தேவஸ்வம் போர்டு அதிரடி! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு.
சபரிமலை: மாதவிடாய் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து தேவஸ்வம் போர்டு அதிரடி! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு.
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Top 10 News Headlines: மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
DMK Congress Alliance:28 தொகுதி தான் லாஸ்ட்.! ”இருக்கிறதுன்னா இருங்க... இல்லைனா..” காங்கிரசை கதறவிட்ட திமுக
28 தொகுதி தான் லாஸ்ட்.! ”இருக்கிறதுன்னா இருங்க... இல்லைனா..” காங்கிரசை கதறவிட்ட திமுக
Iran Earthquake: அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
iPhone 17e Review: இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
Embed widget