விமானத்தின் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மகாரஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து அசாம் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் சிறிதி நேரத்திலேயே தரையிறக்கப்பட்டது. 

Continues below advertisement

புனே விமான நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இண்டிகோ விமானம் புறப்பட்ட நிலையில், சிறிதி நேரத்திலேயே கியரில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதை விமானி கவனித்ததாக தெரியவருகிறது. இதனையடுத்து புனே விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 

இதன் காரணமாக அசம்பாவிதம் ஏதுமின்றி 192 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் தப்பித்தனர். விமானத்தை இயக்குவதற்கு முன்னர் பலமுறை சோதனைக்குள்ளாக்க வேண்டுமெனவும் பயணிகள் விமான நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

Continues below advertisement