Passport Ranking: சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டில் முதல் 100 இடங்களை கூட பிடிக்க முடியாமல் இந்தியா தொடர்ந்து தடுமாறி வருகிறது.
பாஸ்போர்ட் ரேங்கிங் - இந்தியாவிற்கு மீண்டும் சரிவு
வலுவான பாஸ்போர்ட்களை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டு விவரங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் நடப்பாண்டிற்கான பட்டியலில் இந்தியா 125வது இடத்திற்கு தள்ளப்பட்டு, தொடர்ந்து முதல் 100 இடங்களுக்குள் நுழைய முடியாத நிலையே தொடர்கிறது. முன்னதாக கட்ந்த 2021-23ம் ஆண்டு கால கட்டங்களில் 127வது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட் 2025ம் ஆண்டு 124வது இடத்திற்கு முன்னெறியது. ஆனால், தற்போது அது மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. 26 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு மட்டுமே, இந்திய பாஸ்போர்டை கொண்டவர்களால் தற்போது விசா இன்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
88 நாடுகளுக்கு விசா கட்டாயம்:
பாஸ்போர்டின் வலிமையை குறிக்கும் இந்த பட்டியலில் நமீபியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ், மொராக்கோ மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை காட்டிலுன் பின்தங்கியுள்ளது. அதேநேரம், அஜர்பைஜான் மற்றும் கிரிகிஸ்தானை விட இந்த பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்திய பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் பூட்டான். நேபாளம், ஜமைக்கா, மக்காவ், பாலஸ்தீனம், துனிசியா, அங்கோலா மற்றும் பார்படாஸ் உள்ளிட்ட இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் அல்லது அங்கு சென்றடைந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா யூனியன், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட சுமார் 88 நாடுகளுக்குள் நுழைய இந்தியர்கள் முன்கூட்டியே விசா எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
பின்னடைவுக்கான காரணம் என்ன?
தாய்லாந்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அண்மையில், இந்தியர்களுக்கான விசா இல்லாத நுழைவை ரத்து செய்ததே இந்திய பாஸ்போர்ட் கண்டுள்ள பின்னடைவுக்கு காரணமாக கூறப்படுகிறது. குடியேற்ற பிரிவுகளில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க தாய்லாந்தும், போலியான வேலை வாய்ப்புகளை அளித்து இந்தியர்களை நாட்டிற்குள் வரவழைத்து, பணம் கேட்டு கடத்திய தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து ஈரானும், இந்தியர்களுக்கான தங்களது சலுகையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
அண்டை நாடுகளின் நிலவரம்:
வலுவான பாஸ்போர்ட்களுக்கான பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளில், சீனா 104-வது இடத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 125-வது இடத்தில் உள்ளது. இருப்பினும், பல தெற்காசிய நாடுகளை விட இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. குறிப்பாக வங்கதேசம் 166-வது இடத்திலும், நேபாளம் 164-வது இடத்திலும், பாகிஸ்தான் 188-வது இடத்துடனும் இந்தப் பட்டியலின் கீழ்மட்டத்திலும் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம்:
2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டின் முதல் 10 இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இது, உலகளாவிய பயணப் போக்குவரத்தில் அந்த பிரந்தியத்தின் தொடர்ச்சியான வலிமையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அமெரிக்காவும் ஃப்ரான்சும் 11வது இடத்தைப் பிடித்து, முதல் 10 இடங்களை நூலிழையில் தவறவிட்டுள்ளன. அதே சமயம், கனடா 13வது இடத்தில் உள்ளது. இது, உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் ஐரோப்பாவைத் தெளிவான முன்னணியில் நிறுத்துகிறது.
பாஸ்போர்ட் ரேங்கிங் - டாப் 10 லிஸ்ட்
- நார்வே
- சுவிட்சர்லாந்து
- ஃபின்லாந்து
- ஜெர்மனி
- டென்மார்க்
- நெதர்லாந்து
- அயர்லாந்து
- ஐரோப்பிய யூனியன்
- நார்வே
- சிங்கப்பூர்
