இந்தியாவிலிருந்து  அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை போலவே, துபாய்க்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையும்,மிக வேகமாக உயர்ந்துள்ளது.


இந்தியாவிலிருந்து அதிகப்படியான எண்ணிக்கையில் துபாய்க்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என துபாயின் சுற்றுலாத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இந்தியாவில் இருந்து 4.09 லட்சம் பேர் துபாய்க்கு வருகை தந்துள்ளனர்.


இதே எண்ணிக்கை 2002 ஆம் ஆண்டின் ஜனவரியில் இருந்து ஜூன் வரையிலும் 8.58 லட்சமாக ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.


இந்த எண்ணிக்கை ஏற்றார் போல துபாயின் சுற்றுலாத்துறை மிக அதிகப்படியான வசதிகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் இந்தியாவில் இருக்கும் திரை பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசாக்களை வழங்கியும் தனது சுற்றுலா துறையை மேம்படுத்த விரிவான திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது.


கச்சா எண்ணெய் வளமிகுந்த அரபு நாடுகளில் துபாய் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கச்சா எண்ணெய்  மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளின் வருகையில் துபாய் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


ஒட்டுமொத்தமாக, துபாய்க்கு 2022 ஜனவரியில் இருந்து ஜூன் மாதங்களுக்கு இடையில் 71.2 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள்  வந்திருக்கிறார்கள் என்று  துபாயின் சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது.


2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வந்த 25.2 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு வளர்ச்சியைப் அடைந்துள்ளது.


இது துபாயின் சுறுசுறுப்பான செயல்பாட்டையும் (பெட்ரோலிய பொருட்கள் அல்லாத) பொருளாதார வளர்ச்சியையும் தந்திருப்பதாக துபாய் முடிக்குரிய இளவரசரும், துபாய் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்தார்.


சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருப்பது,உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடமாக துபாயை மாற்றும் தங்கள் லட்சியத்திற்கு, இந்த எண்ணிக்கை ஒரு உற்சாகத்தை அளிக்கும் என்றும், இந்த இலக்கை விரைவில் எட்டுவோம் என்றும்,அவர் தெரிவித்தார். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு சர்வதேச தரத்தில், தேவைப்படும் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும்,இதுவும் இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 83.6 லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வருகை தந்துள்ளதாக துபாய் சுற்றுலாத்துறை  தெரிவித்து இருக்கிறது .


 2022 இன் முதல் ஆறு மாதங்களில் மொத்த சர்வதேச பார்வையாளர்களில் எண்ணிக்கையில்  கணக்கிடும் பொழுது  இது 22% ஆகும்.


உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை காணவும்,அரேபிய வளைகுடாவில் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகளின் தொகுப்பான  பாம் ஜுமைராவை,காணவும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த செயற்கைத் தீவானது வானத்திலிருந்து பார்க்கும் பொழுது ஒரு பனை மரத்தின் வடிவத்தை ஒத்திருக்கும்.


இதைப் போலவே டெசர்ட் சபாரி, பாலைவனத்தில் சிறப்பையும், அந்த பாலைவனத்தில் பயணிக்கும் திரில்லிங்கான உணர்வை அனுபவிப்பதற்கு சுற்றுலாப் பணிகளை ஊக்குவிக்கும்.இதே போலவே எதிர்கால மியூசியமானது, உலகின் அழகான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.7 தலங்களைக் கொண்ட இந்த கட்டிடம் ஒரு வட்ட வடிவத்தில்  சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் படியாக இருக்கிறது. இதே போலவே துபாய் ஃப்ரேம்,துபாய் அக்வாரியம், துபாய் ஸ்கைட் பீச் மற்றும் துபாய் பீச் என துபாயை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
வெறும் மணல் பரப்பாக, பாலைவனமாக இருந்த துபாயை, மிக அழகான,உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து குவிய கூடிய இடமாக மாற்றி வருவாயையும் மேம்படுத்தும் படியாக துபாயை மாற்றி அமைத்து இருப்பது பாராட்டக்கூடிய அம்சமாகும்.