Watch Video: பலத்தை பரிசோதித்த இந்தியா! அரபிக்கடலையே அதிரவைத்த சோதனை! வீடியோவைப் பாருங்க
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ஏவுகணைகளை தடுக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவு இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது போல, பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை வெளியேற அந்த நாடும் உத்தரவிட்டுள்ளது.
இந்திய போர்க்கப்பல் ஏவுகைணத் தாக்குதல் சோதனை:
இரு நாட்டு ராணுவமும் எல்லையில் வீரர்களையும், படைகளையும் குவித்துள்ள நிலையில் இந்திய கடற்படை முழுவீச்சில் தயாராக உள்ளது. அரபுக்கடலில் இன்று இந்திய போர்க்கப்பல் ஏவுகணைகள் மீது எதிர்தாக்குதல் நடத்தும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
#IndianNavy Ships undertook successful multiple anti-ship firings to revalidate and demonstrate readiness of platforms, systems and crew for long range precision offensive strike.#IndianNavy stands #CombatReady #Credible and #FutureReady in safeguarding the nation’s maritime… pic.twitter.com/NWwSITBzKK
— SpokespersonNavy (@indiannavy) April 27, 2025
தொலைதூர துல்லியமான தாக்குதல், தாக்குதலுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் குழு எந்தளவு தயார் நிலையில் இருக்கிறது என்நதை சரிபார்ப்பதற்காக இந்த கப்பல் ஏவுகணை எதிர்ப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடத்திய வீீடியோவையும் கடற்படை தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
கொந்தளிப்பை ஏற்படுத்திய பகல்ஹாம் தாக்குதல்:
இந்த சோதனைக்கு முன்பாக இந்திய கடற்படையின் முக்கியமான போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத் அரபிக்கடலின் நஐத்தர தூரத் தரையில் இருந்து வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது.
போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை முழுவீச்சில் தயார் செய்து வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.
தொடர் பதற்றம்:
இதற்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்திய அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்தியா தனது எதிர்ப்பை காட்டும் விதமாக பாகிஸ்தானின் நீர் ஆதாரமாக திகழ்ந்த இந்தியாவில் இருந்து சென்று கொண்டிருந்த சிந்து நதி நீரை நிறுத்தியது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்வதாக அறிவித்ததால் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் தாக்குதல் விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடு்த்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக மத்திய அரசுக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.























