மேலும் அறிய

Ebola Virus : அச்சுறுத்தும் எபோலா.! 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லாதீங்க.! பொதுமக்களுக்கு மத்திய அரசு அலர்ட்

Ebola Virus : எபோலா என்ற வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உலக மக்களை அச்சுறுத்தும் எபோலா

கொரோனா பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகமே பாதிக்கப்பட்டு பல கோடி மக்கள் உயிரிழந்தனர். தற்போது தான்  கொரோனா பாதிப்பில் இருந்து விலகி மக்கள் இயல்பான நிலைக்கு நோக்கி நகர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் ஒரு வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் எபோலா என்ற வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி  மரணத்தை ஏற்படுத்தி வருகிறது.பழ வெளவால்கள்  போன்ற வன விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த எபோலா வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் இரத்தம், சுரப்புகள் அல்லது இறந்த உடல்களுடன் தொடர்பு கொள்வதால் வைரஸ்  தொற்று ஏற்படுகிறது. 

எபோலா அறிகுறிகள் என்ன.?

இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், தீவிர சோர்வு, தசை வலி, தலைவலி, தொண்டை வலி ஏற்படும். இதனை தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சருமத்தில் சிவப்பு வெடிப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இறுதியாக உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்த நிலையில் எபோலா வைரஸ் தற்போது காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லாதீங்க

இதனையடுத்து இந்த எபோலா வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் வரும் பயணிகள் எந்த நாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.

உடல் நிலைப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதா.? என்பதை கண்காணித்து வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வரும் பயணிகளை முழுமையாக சோதனை செய்த பிறகே விமான நிலையத்திற்கு வெளியே அனுப்பும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய மக்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget