குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளுக்காக உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப் படை நன்றி கூறியுள்ளது. 


இதுதொடர்பாக இந்திய விமானப் படையின் டுவிட்டர் பக்கத்தில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளுக்காக உதவிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு மீட்பு பணி நடவடிக்கையில் உதவிய செய்த நீலகிரி ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும்  கட்டேரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆகியோருக்கும் நன்றி’ பதிவிட்டுள்ளது.


 






நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.  ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர். 


அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். 


இந்த விபத்து நடந்த அன்று மாலையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விரைந்து, அங்கிருந்து வெலிங்டன் ராணுவ பகுதிக்கு சென்றார். விபத்து நடந்த பகுதியில் மீட்புபணிகளை துரித்தப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இரவு ராணுவ அதிகாரிடம் விபத்து குறித்து கேட்டறிந்த பின்னர், பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொட


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண