மெல்போர்ன் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் 'லுங்கி டான்ஸ்' பாடலுக்கு ஆடும் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைக்கு சிறப்பு தீபாவளி பரிசு கிடைத்தது. ஆமாம். டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா கடைசி ஓவரில் திரில் வெற்றியை பதிவு செய்தனர். பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டம் எப்போதும் பெரிதும் எதிர்பாக்கப்படுவதாக இருக்கும். இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்புடன் அமைந்தது. ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய டி20 உலக கோப்பை ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கோலி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று உலககோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தீபாவளி முதல் நாளான நேற்று, அதுவும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் இந்த போட்டியை உலகளவில் கிட்டதட்ட 70 கோடி பேர் கண்டு ரசித்தனர். இதுவும் உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்தது. நேற்றைய போட்டியில் விராட் கோலியின் முக்கியமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. மீண்டும் பல நாளுக்கு பிறகு ஒரே நாளில் விராட் கோலி ஹீரோ ஆனார்.
ம்ஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை மக்கள் மத்தியில் நகைச்சுவை கலந்து எளிய முறையில் கூறுவது வழக்கம். அதேபோல் நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற டி20 கிரிகெட் போட்டியின் போது ரசிகர்கள் நடனமாடியதை, "லுங்கி டான்ஸ் உடன் பாங்க்ரா பட்டாலியனின் வலிமையைக் கொண்டதை பார்த்தால், போட்டிக்கு முன்னரே T20WC 2022 உலகக் கோப்பையை இந்தியா வென்றதாகத் தெரிகிறது." என பதிவிட்டிருந்தார். ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில், இந்திய ஆதரவாளர்கள் நீல நிற ஜெர்சி அணிந்து பாடலைப் பாடுவதையும், போட்டிக்கு முன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகத்துடன் உற்சாகப்படுத்துவதையும் காணலாம். 'லுங்கி டான்ஸ்' பாடலை ராப்பர் ஹனி சிங் பாடியுள்ளார்.
இந்த் பாடல் ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம் பெற்றது. இந்த பதிவு ஒரே நாளில் 1.9 லட்சத்திற்கும் அதிகமான பார்த்து ரசித்துள்ளனர். ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர், மேலும் அணியின் உற்சாகத்தைப் பாராட்டி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். "இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்களும், இந்த முறை இந்திய அணி டி20 உலகக் கோப்பை வெள்ளும் தருனத்தை காண நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்" என்று ஒருவர் பதில் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், இந்த பதிவைப் பகிர்ந்ததற்காக ஆனந்த் மகிந்த்ராவுக்கு நன்றி எனவும், பாகிஸ்தானுடனான எந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுவது உலகக் கோப்பையை வெல்வது போன்றது” என பதிவிட்டிருந்தார்.