News Today Live | விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.23 லட்சம் பறிமுதல்.. லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE

Background
தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் மீது சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது சி.விஜயபாஸ்கர் மீது சோதனை நடத்தப்படுகிறது.
விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.23 லட்சம் பறிமுதல்.. லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.23 லட்சம் பறிமுதல் என 4.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு
சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு.
விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
சென்னை கீழ்ப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை.
விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது தந்தை சின்னத்தம்பி வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு
விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் சோதனை
புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசலில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் கிரஷரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்
விஜயபாஸ்கர் நெருங்கிய உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள அவரது சகோதரர் உதயகுமார் வீடு மற்றும் அன்பு நகரில் உள்ள அவரது நெருங்கிய உறவினர் வீட்டில் போலீசார் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில்,
ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.