= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா மகாராஷ்ட்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 9 ஆயிரத்து 350 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை அந்த மாநிலத்தி்ல் 59 லட்சத்து 24 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் இன்று மட்டும் அந்த மாநிலத்தில் 388 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மகாராஷ்ட்ராவில் கொரோனா வைரசால் 1 லட்சத்து 14 ஆயிரத்து 154 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் புதியதாக 11 ஆயிரத்து 805 நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 லட்சதது 78 ஆயிரத்து 298 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 1,563 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 793 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை உள்ளே வர தடை - பிலிப்பைன்ஸ் அரசு கொரோனா பரவலின் இரண்டாம் அலை பல்வேறு நாடுகளிலும் காணப்படுகிறது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் அரசு அந்த நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வரும் ஜூன் 30-ந் தேதி வரை தடை விதித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஜார்க்கண்டில் சனிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோயால் 2,303 நபர்கள் பாதிப்பு நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் 2 ஆயிரத்து 303 நபர்கள் தற்போது வரை கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,328 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மாநிலத்தில் மட்டும் 157 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதும்.. ஆய்வில் தகவல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றிலிருந்து முழுமையகாக் குணமடைந்து குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதும் என இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வில் உறுதியாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பும் சரி, இந்திய சுகாதார அமைச்சகமும் சரி இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 3 மாதங்களுக்குப் பின்னர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றே இதுவரை வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு டோஸ் ஊசியே போதுமானது என்று பரிந்துரைக்கிறது. மேலும், இதன்மூலம் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் தடுப்பூசியை திறம்பட அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
புதுச்சேரியில் மேலும் 355 பேருக்கு கொரோனா புதுச்சேரியில் மேலும் 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 1,13,192 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 1,696 ஆக உயர்ந்துள்ளது. 4,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரணம் கொரோனா நிவாரண நிதியாக நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாய் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இந்த நிதியை வழங்கியுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்வர் ஆலோசனை கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கொரோனா பாதிப்பு இன்று 60 ஆயிரமாக ஆக குறைந்தது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 80 ஆயிரம், நேற்று 70 ஆயிரமாக இருந்த பாதிப்பு இன்று 60 ஆயிரமாக ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 410இல் இருந்து 2 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 881-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,726 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 305ல் இருந்து 3 லட்சத்து 77 ஆயிரத்து 031ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 62 ஆயிரத்து 947இல் இருந்து 2 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 95.64 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.28 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்து 378-ஆக குறைந்துள்ளது. இதுவரை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 072 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தேனியில் மேலும் 55 பேருக்கு கொரோனா தேனி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிப்பு 40,911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 4 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
உலகளவில் 17.70 கோடி பேருக்கு கொரோனா உலகில் 17.70 கோடி பேருக்கு கொரோனா: 38.27 லட்சம் பேர் உயிரிழந்தனர். 16.11 கோடி பேர் குணமடைந்தனர். அமெரிக்காவில் புதிதாக 9,487 பேருக்கு கொரோனா. ஒரேநாளில் 198 பேர் தொற்றால் உயிரிழந்தனர். பிரேசிலில் ஒரேநாளில் 40,865 பேர் பாதிக்கப்பட்டனர். 928 பேர் பலியானார்கள்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
14 மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் கொரோனா பாதிப்பு நிவாரண இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் 14 மளிகை தொகுப்பு இன்று ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு.