இந்திய இருசக்கர வாகன சந்தையில் கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சென்ற ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை ஒட்டுமொத்தமாக 19.60 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ள செய்தி ஆட்டோமொபைல் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 14.66 லட்சமாக இருந்த இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை, இந்த ஜூலை மாதத்தில் 17.54 லட்சமாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

Continues below advertisement

ஹீரோ, ஹோண்டா மற்றும் டி.வி.எஸ் நிறுவனங்களின் விற்பனை விவரம்

நாட்டின் முன்னனி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ நிறுவனம் விற்பனையில் தனது முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. கடந்த ஜூலையில் 4,09,983 ஆக இருந்த இந்நிறுவனத்தின் விற்பனை, இந்த ஆண்டு 22.30 சதவீதம் உயர்ந்து 5,01,403 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஹோண்டா நிறுவனமும், மூன்றாவது இடத்தில் டி.வி.எஸ் நிறுவனமும் நிலைபெற்றுள்ளன. ஹோண்டா நிறுவனம் ஜூலை 2025-இல் 4,66,331 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 2.2 சதவீதம் வளர்ச்சியடைந்து 4,76,436 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் அதிரடி காட்டிய டி.வி.எஸ் மற்றும் பிற முன்னணி நிறுவனங்கள்

மொத்த இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சியில் டி.வி.எஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 37.45 சதவீதம் வரை உயர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 2,98,705 ஆக இருந்த விற்பனை, நடப்பு ஆண்டில் 42.4 சதவீத அபார வளர்ச்சியுடன் 4,37,394 வாகனங்களாக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பஜாஜ் நிறுவனம் தனது விற்பனையை 1,39,279-லிருந்து 19 சதவீதம் உயர்த்தி 1,65,747 ஆகப் பதிவு செய்துள்ளது. சுசுகி நிறுவனம் 15 சதவீத வளர்ச்சியுடன் 74,159-லிருந்து 1,23,216 வாகனங்களையும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 27 சதவீத வளர்ச்சியுடன் 69,353-லிருந்து 1,05,317 வாகனங்களையும் விற்பனை செய்து சந்தையில் தங்கள் பலத்தை நிரூபித்துள்ளன.

Continues below advertisement

Car loan Information:

Calculate Car Loan EMI