India Pakistan War: பாகிஸ்தானுக்கு மரண அடி... பயமில்லாமல் அடித்து காட்டிய இந்திய ராணுவம்! வெளியான மாஸ் வீடியோ
India Pakistan War ஜம்முவின் முக்கிய இடங்களை நோக்கி பாகிஸ்தான் ஏவிய குறைந்தது எட்டு ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்தன

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை முறியடித்த வீடியோ காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்:
ஜம்முவின் முக்கிய இடங்களை நோக்கி பாகிஸ்தான் ஏவிய குறைந்தது எட்டு ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்தன. திட்டமிடப்பட்ட இலக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா மற்றும் ஆர்னியா ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.
ஜம்மு மற்றும் பதான்கோட் உள்ளிட்ட இந்தியாவின் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் வேகமாக அதிகரித்தன. வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் சுமார் 15 இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து இது நடந்தது, அவையும் முறியடிக்கப்பட்டன. இந்த 15 இடங்களில் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் ஆகியவை அடங்கும்.
இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு:
இந்த ட்ரோன் தாக்குதல்கள் மூலம் பல வீடியோக்கள் வெளியான நிலையில் இன்று இந்திய ராணுவம் அதிரடியாக தாக்கு வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
OPERATION SINDOOR
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 9, 2025
Pakistan Armed Forces launched multiple attacks using drones and other munitions along entire Western Border on the intervening night of 08 and 09 May 2025. Pak troops also resorted to numerous cease fire violations (CFVs) along the Line of Control in Jammu and… pic.twitter.com/WTdg1ahIZp
சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மே 08 மற்றும் 09, 2025 அன்று இரவு மேற்கு எல்லை முழுவதும் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் துருப்புக்கள் ஏராளமான போர்நிறுத்த மீறல்களையும் (CFV) மேற்கொண்டன. ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன, மேலும் CFV களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. #இந்திய இராணுவம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்தால் பதிலளிக்கப்படும்.






















