Coronavirus LIVE Updates : தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, 1859 பேருக்கு பாதிப்பு!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1859 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இறங்குமுகமாக 1756 பேருக்கு மட்டும் பாதிப்பு இருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 28 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 756 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,55,997 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,756 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 53 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 756 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 164 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 164 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,995 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் மேலும் 22,056 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் அவசியம் தேவை என்று அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 46.23 கோடிக்கும் அதிகமான (46,23,27,530) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 1,20,70,820 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 44,29,95,780 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2.18 கோடி (2,18,10,422) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
VACCINE DOSES |
(As on 28 July 2021) |
SUPPLIED |
46,23,27,530 |
IN PIPELINE |
1,20,70,820 |
CONSUMPTION |
44,29,95,780 |
BALANCE AVAILABLE
|
2,18,10,422 |
இந்தியாவில் ஏற்பட்ட இரண்டு கொரோனா அலைகளில் 2.7 முதல் 3.3 மில்லியன் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டதாக, மெட்ரிவிக்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மதிப்பீடு செய்யப்படாத ஆய்வறிக்கை அடிப்படையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் மூன்று வெவ்வேறு விதமான தரவுகளை மேற்கோள்காட்டி, ஒரு ஆண்டில் குறைந்தது 27 சதவீத உயிரழப்புகள் அதிகமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த அறிக்கை, இந்த கொரோனா இறப்பு வீதம், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட அளவைவிட 7 முதல் 8 மடங்கு அதிகம் இருக்கலாம் எனவும் இந்த கூடுதல் இறப்புகள் எல்லாம் கொரோனா உயிரிழப்புகளாக இருக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
இது போன்ற தவறான தகவல்கள் முற்றிலும் தவறானவை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
"இறப்புகள் பதிவில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, கொவிட்-19 தொடர்பான இறப்புகளை, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ஐசிடி-10 விதிமுறைப்படி சரியாக பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ளது.
கொரோனா 2-ம் அலை உச்சத்தில் இருந்தபோது, கொவிட் சிகிச்சை மேலாண்மையில் கவனம் செலுத்தப்பட்டதால், கொவிட் உயிரிழப்புகளை சரியாகப் பதிவு செய்வது தாமதமாகியிருக்கலாம். பின்னர் இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் சரிசெய்யப்பட்டது. இறப்பு பதிவு முறை இந்தியாவில் வலுவாக உள்ளதால், இறப்புகள் பதிவு தவறுவதற்கு வாய்ப்பில்லை" என்று தெரிவித்தது
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 42,363 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 124 நாட்களுக்குப் பிறகு 4,00,000ஆகக் குறைந்துள்ளது; தற்போது இது 3,99,436 உள்ளது.
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 756 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,55,997 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,756 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 53 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 546 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 164 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 164 ஆக உள்ளது.
கோவை 179, ஈரோடு 140, தஞ்சை 78, சேலம் 92, திருப்பூர் 80, செங்கல்பட்டு 117, கடலூர் 62, திருச்சி 55, திருவண்ணாமலை 50, திருவள்ளூர் 62, நாமக்கல் 50, கள்ளக்குறிச்சி 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,995 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 8 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 4 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8315 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக சேலத்தில் 5 பேரும், கோவையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 22 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 21,521 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,394 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,98,289 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
12 வயதிற்குட்பட்ட 96 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39,412 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25,025 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7848 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -