ஒடிஷாவின் ஸ்ரேயா லெங்கா தொழில்முறை கே-பாப் கலைஞரான முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த 18 வயது பெண்ணான இவர், கேப்ரியேலா டால்சின் என்ற பிரேசிலியப் பெண்ணுடன் சேர்ந்து, பிரபல தென் கொரிய இசைக் குழுவான Blackswan இல் இணைந்துள்ளார். இந்தச் செய்தியை பிளாக்ஸ்வானின் மியூசிக் லேபிலான டிஆர் மியூசிக் அறிவித்துள்ளது.


டிஆர் மியூசிக் நிகழ்ச்சி


உலகெங்கிலும் உள்ள வளர்ந்து வரும் பாடகர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக டிஆர் மியூசிக் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஸ்ரேயா (அவரது மேடைப் பெயர் ஸ்ரீயா) மற்றும் கேப்ரியேலா (கேபி) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இசை லேபிளின் பதிவில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. சிக்னஸ் என்று அழைக்கப்படும் இந்த இசை நிகழ்ச்சி, இளம் இசைக்கலைஞர்களின் கனவை நனவாக்க உதவுகிறது என்று அந்த பதிவின் தலைப்பு தலைப்பு கூறியது. "முதலாவது சிக்னஸ் உறுப்பினர்களாக ஸ்ரீயாவும் கேபியும் விரைவில் வருகிறார்கள். உங்கள் ஆர்வத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி. சிக்னஸ் திட்டம் தொடர்கிறது, ”என்று அந்த பதிவில் எழுதப்பட்டு இருந்தது.






வெற்றிடம் வந்த காரணம்


நவம்பர் 2020 இல் பிளாக்ஸ்வானின் உறுப்பினர்களில் ஒருவரான ஹைம் குழுவிலிருந்து வெளியேறியதால் சிக்னஸ் என்ற குழு உருவானது. தற்போது அந்த இசைக்குழுவில் யங்ஹூன், ஃபட்டூ, ஜூடி, லியா, கேபி மற்றும் ஸ்ரீயா ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு DR மியூசிக் மூலம் அறிவிக்கப்பட்ட ஆறு மாத கால உலகளாவிய ஆடிஷன்களில் பங்கேற்ற பிறகு, ஸ்ரீயா லென்கா மற்றும் கேபிரியலா டால்சின் இந்த இசைக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


டிஆர் மியூசிக் இயக்குனர்


டிஆர் மியூசிக் என்டர்டெயின்மென்ட்-இன் கொரிய இயக்குனர் பிலிப் ஒய்ஜே யூன் கூறுகையில், "ஆடிஷனில் லென்காவும் டால்சினும் ஒன்றாக இணைந்து பெர்ஃபார்ம் செய்தனர். அவர்கள் இருவரும் இணைந்து செயல்படும்போது, தெறிக்கும் எனர்ஜி வெளிப்பட்டது. அதனால்தான் எங்களுக்கு ஒரே ஒரு பாடகர் தேவைப்பட்ட போதும் இருவரையும் தேர்வு செய்தோம். இருவரையும் பிரிக்க நினைக்கவில்லை. பயிற்சியின் ஒரு பாகமாக டிசம்பர் முதல் இருவருக்கும் கொரிய மொழி, நடனம், குரல் வளம் ஆகியவை மேம்படுத்தப்பட்டன. தற்போது இருவரும் ஸ்டேஜில் பாடுவதற்கு தயாராகிவிட்டனர். 






ஒடிசி கற்றுக்கொண்டார்


ஸ்ரேயா கே-பாப்பிறகு தேர்வானது வீட்டிற்கு தெரிந்த உடன், அவரது பாட்டி அவரை க்ளாசிக்கள் இசை கற்றுக்கொள்ள அனுப்பி உள்ளார். அதுமட்டுமின்றி ஒடிஷாவின் நடனமான ஒடிசியை கொஞ்ச நாட்கள் மட்டும் கற்றுள்ளார். அது அவருக்கு சில நுணுக்கமான விஷயங்களை நடனத்தில் மேம்படுத்தி உள்ளதாக குறிப்பிடுகிறார்.