Coronavirus LIVE Updates: கேரளாவில் 5 வது நாளாக 20 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா. இன்று 20624 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் - இன்று மட்டும் 80 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ் சென்னை வந்தன. புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு தடுப்பூசி டோஸ் வந்தன.
பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளையும் நாளை முதல் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,20,915 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,18,158 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவால் இருவர் உயிரிழந்தனர்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள பயாலஜிக்கல் இ நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில், தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 4,08,920 ஆக அதிகரித்துள்ளது. தினசரி குணமடைபவர்களை விட, புதிதாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சைப் பெறுபவர்களின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி இன்று செலுத்தப்படுகிறது.
இன்று (31.07.2021) கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 37,291 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,08,920 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 593 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோயம்பத்தூர் மாநகராட்சியில் உள்ள தடுப்பூசி மையங்களில் இன்று 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கோவாக்சின் இரண்டாவது கட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படுகின்றன.
ஆதரவற்ற பெண்கள் / பிச்சைக்காரர்கள் / வீடற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க வேண்டும் என மாநில/ யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
“நாடு முழுவதும் டெல்டா ப்ளஸ் வைரஸால் 70 பேரும் தமிழ்நாட்டில் 10 பேரும் பாதிக்கப்பட்டனர்” என ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார். ஜூலை 22 வரை 46124 சாம்பிள்களை ஆய்வு செய்ததில் டெல்டா வகை வைரஸ் 58.4% எனத் தெரிய வந்துள்ளது.
Background
தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -