Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்குகிறது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1986 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 26 பேர் உயிரிழிந்துள்ளனர். நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. நேற்றில் இருந்து தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 947 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,56,843 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,947 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 57 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 215 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 215 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 27 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,050 ஆக அதிகரித்துள்ளது.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கேரளாவில் இன்று 20,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,651 பேர் குணமடைந்த நிலையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கூடுதல் தளர்வுகள் ஏதும் வழங்கப்படவில்லை. “கட்டாயமாக உடல்வெப்ப நிலை பரிசோதனையை வாடிக்கையாளர்களுக்கு வணிக நிறுவனங்கள் செய்ய வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் அதிகளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறைக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
டெல்லியில் 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் குணமடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.43 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 5 சதவீதத்திற்கும் குறைவாக 2.44 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 42,360 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,155 ஆக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று (30.07.2021) வெள்ளிக்கிழமை மொத்தம் 138 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு, மொத்தம் 10,230 கோவேக்சின் மற்றும் 24,590 கோவிசில்டு தடுப்பூசிகள் என பொத்தம் 34,820 கோவேக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசிகள் வரப்பெற்றுள்றன. இம்பையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசியும், கோவிஷில்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்படவுள்ளன.
கோவாக்சின் தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பு இல்லாத காரணத்தினால் முதல் தவணை தடுப்பூசி போட இயலாது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முயடிவடையும் நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை கோவிசீல்டு தடுப்பூசி மட்டும் இன்று வழங்கப்படுகிறது.
கேரளாவில் தற்போது 1.54 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாட்டின் மொத்த பாதிப்பில் இது 37.1% ஆகும். கடந்த 7 நாட்களில் இந்த எண்ணிக்கை 1.41% வளர்ச்சியடைந்துள்ளது. சராசரி தினசரி பாதிப்புகள் இந்த மாநிலத்தில் 17,443 க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் 12.93% ஆகவும், வாராந்திர விழுக்காடு 11.97% ஆகவும் உயர்ந்துள்ளது. 6 மாவட்டங்களில் வாராந்திர நோய்த்தொற்று உறுதி விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் (30/07/2021) நடைபெற உள்ள தடுப்பூசி முகாம்களின் விபரம்.
கலையரங்கம்மஹால், தேவர்ஹால் மேலபுலிவார்டு ரோடு ஆகிய முகாம்களில் கோவாக்சின் தடுப்பூசியின் இடண்டாவது டோஸ்கள் போடப்படுகின்றன.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் இன்று (30/07/2021) நடைபெற உள்ள தடுப்பூசி முகாம்களின் விபரம்- இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் 1800க்கும் மேற்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் போடப்படுகின்றன.
மாவட்ட வாரியாக கோவிட்-19 தொற்றால் பாதித்தவர்களின் விவரம்
கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. கிட்டத்தட்ட, 70 நாட்களுக்குப் பிறகு, முதன்முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
Background
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், இன்று (30.07.2021) மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -