Breaking News LIVE: விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் - உடற்கூராய்வில் தகவல்

Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

தமிழ்நாட்டில் இன்று முதல் கத்தரி வெயில் தொடங்குகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நாளை முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 

Continues below advertisement
19:13 PM (IST)  •  04 May 2022

விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம்

விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் எனவும் ரத்தக் கட்டுகள் காணப்படுவதாகவும் உடற்கூர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கிய அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது என ஆய்வில் தகவல்

12:58 PM (IST)  •  04 May 2022

மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

11:46 AM (IST)  •  04 May 2022

மதுரை மருத்துவக்கல்லூரியின் டீனாக மீண்டும் ரத்தின வேல் நியமனம்..!

மதுரை மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி எடுத்தது தொடர்பாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த கல்லூரி முதல்வர் ரத்தினவேலு மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார் 

11:29 AM (IST)  •  04 May 2022

மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்தின வேல் நியமனம் - மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்பு..!

மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்தின வேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 

11:01 AM (IST)  •  04 May 2022

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் 9 மணிக்கு வந்தால் போதும் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு..!

நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதில் 9 மணிக்கு வந்தால் போதும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

10:40 AM (IST)  •  04 May 2022

Breaking News LIVE: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

09:41 AM (IST)  •  04 May 2022

பொதுப்பணித்துறைக்கான வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!

பொறியாளர்கள் பயன்பாட்டுக்காக ரூ 2.38 கோடியில் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

09:08 AM (IST)  •  04 May 2022

சத்தமில்லாமல் உயரும் கொரோனா பாதிப்பு.. 3,205 பேருக்கு கொரோனா உறுதி..!

இந்தியாவில் ஒரே நாளில் 3,205 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 3,157 ஆகவும், நேற்று 2,568 ஆகவும் இருந்த கொரோ பாதிப்பு 3,205 ஆக உயர்ந்துள்ளது.  

08:20 AM (IST)  •  04 May 2022

தமிழகம் வர முயன்ற 14 ஈழத்தமிழர்கள் இலங்கையில் கைது

தமிழகம் வர முயன்ற 14 ஈழத்தமிழர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

07:42 AM (IST)  •  04 May 2022

பேரறிவாளன் வழக்கு இன்று விசாரணை

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைதான பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

07:41 AM (IST)  •  04 May 2022

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்று தகவல் தொடர்புத்துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

07:39 AM (IST)  •  04 May 2022

தமிழ்நாட்டில் இன்று கத்திரி வெயில் தொடக்கம் ...

தமிழ்நாட்டில் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. இதன்காரணமாக வெப்பம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.