Breaking LIVE: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 10 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட முடிவு - கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்

Independence Day 2023 LIVE Updates: சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து இங்கு உடனுக்கு உடன் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 15 Aug 2023 01:28 PM
சரிப்பா.. தண்ணீர் திறந்து விடறோம் ஆனால்.. கர்நாடக துணை முதலமைசர் டி.கே. சிவக்குமார் பளீச்

தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்படும் என  கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் ஆளுநர் தந்த தேநீர் விருந்து - புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நடந்த தேநீர் விருந்தை தி.மு.க., இடதுசாரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்

டெல்லி செங்கோட்டை கொடியேற்றத்துக்கு ஏன் வரவில்லை - கார்கே விளக்கம்

டெல்லி செங்கோட்டை கொடியேற்றத்துக்கு ஏன் வரவில்லை? கண்ணில் பிரச்சனை இருந்ததாகவும், வீட்டில் மரபுப்படி கொடி ஏற்ற வேண்டியதாக இருந்ததாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விளக்கம்

நீட் என்பது கொடூர தேர்வு.. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

நீட் என்பது கொடூர தேர்வு.. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் : சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய பின்பு முதலமைச்சர் ஸ்டாலின் உரை

Independence Day 2023 : மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றினர்

சுதந்திர தினத்தையொட்டி மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர் 

Independence Day 2023 LIVE: எவரெஸ்ட்டில் ஏறிய முத்துச்செல்விக்கு கல்பனா சாவ்லா விருது

Independence Day 2023 LIVE: எவரெஸ்ட்டில் ஏறிய முத்துச்செல்விக்கு கல்பனா சாவ்லா விருது

Independence Day 2023 LIVE: கீ. வீரமணிக்கு தகைசால் விருது

தமிழ்நாட்டின் வளர்ச்சி உழைத்தவர்களுக்கு வழங்கப்படும் தகைசால் விருது இந்த ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணிக்கு வழங்கப்பட்டது. 

Independence Day 2023 LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் - முதலமைச்சர்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால்தான் நீட் தேர்வை ஒழிக்க முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Independence Day 2023 LIVE: ஆட்டோ ஓட்ட விரும்பும் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு நிதியுதவி - முதலமைச்சர்

ஆட்டோ ஓட்ட விரும்பும் மகளிர் மற்றும் இல்லாமல் திருநங்கைகளும் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என முதலமச்சர் கூறியுள்ளார். 

Independence Day 2023 LIVE: ஓலா, ஊபர், ஸ்விக்கி போன்ற தனியார் நிறுவன பணியாளர்களுக்கு நலவாரியம் - முதலமைச்சர்..!

தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஓலா, ஊபர்,ஸ்விக்கி, சோமோட்டோ போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என முதமைச்சர் அறிவித்துள்ளார். 

Independence Day 2023 LIVE: அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி..!

ஆகஸ்ட் மாதம் 25 முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 

Independence Day 2023 LIVE: இனிமேல் விடியல் பயணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு இனி  ’விடியல் பயணம்’  என பெயர் சூட்டப்படுகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Independence Day 2023 LIVE: அம்பேத்கரை வழிமொழிந்த முதலமைச்சர் ஸ்டாலின்

வகுப்புகளுக்கு இடையேயான, பாலினங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளை அப்படியே விட்டுவிட்டு, பொருளாதார பிரச்னைகள் பற்றிய சட்டங்களை உருவாக்கிக்கொண்டே செல்வது என்பது அரசியலமைப்பு சட்டத்தை கேலிகூத்தாக்கும். இது சாணக்குவியலுக்கு மேலே மாளிகையை கட்டுவதுபோலாகிவிடும் என புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: தலைவர்கள் விரும்பிய நல்லிணக்க இந்தியா..!

காந்தி, பக்த் சிங், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் நல்லிணக்கம் நிறைந்த இந்தியாவைத்தான் விரும்பினார்கள்  என முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: மூவர்ணக்கொடியை போற்றுவதன் மூலம்..

மூவர்ணக்கொடியை போற்றுவதன் மூலம் நாட்டு மக்களை போற்றுகிறோம். 

Independence Day 2023 LIVE: தியாகிகளுக்கு வீரவணக்கம்..!

சுதந்திர இந்தியாவுக்கு போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும், அவர்களை பெற்றெடுத்த குடும்பங்கள் இருக்கும் திசைநோக்கி வணங்குவோம் என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: தேசிய கொடி வெறும் கொடி மட்டுமல்ல - முதலமைச்சர்..!

தேசிய கொடி வெறும் கொடி மட்டுமல்ல கோடான கோடி மக்களின் மணி முடி என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: தியாகிகள் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உயர்வு..!

தியாகிகள் குடும்பத்திற்கு ஓய்வு ஊதியம் 11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

Independence Day 2023 LIVE: அரசு வேளாண்மை கல்லூரிக்கு வ.உ.சி பெயர் சூட்டப்படும் - முதலமைச்சர்..!

தூத்துக்குடியில் உள்ள கிள்ளிக்குளத்தில் இயங்கிவரும் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டபடுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

Independence Day 2023 LIVE: கலைஞர் நூற்றாண்டில் கொடி ஏற்றுவதில் மகிழ்ச்சி..!

கலைஞர் நூற்றாண்டில் கோட்டையில் கொடியேற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: மூன்றாவது முறையாக கோட்டையில் கொடி ஏற்றினார் முதலமைச்சர்..!

மூன்றாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். 

Independence Day 2023 LIVE: தேசிய கொடியை ஏற்றி உரையாற்றுகிறார் முதலமைச்சர்..!

தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின உரையாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

Independence Day 2023 LIVE: தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

77வது சுதந்திர தினத்தில் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். 

Independence Day 2023 LIVE: பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்கிறார் முதலமைச்சர்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரின் மரியாதை அணிவகுப்பை ஏற்கிறார்.  

Independence Day 2023 LIVE: கோட்டைக்கு வந்தார் முதலமைச்சர்..!

சுதந்திர தினத்தில் கொடியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டைக்கு வந்தடைந்தார். 

Independence Day 2023 LIVE: பொருளாதாரத்தில் உலகின் முதல் 3 நாடுகளில் இந்தியா இருக்கும்..!

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 3 இடங்களுக்குள் இருக்கும் என உறுதி அளிக்கிறேன் என பிரதமர் கூறியுள்ளார். 

Independence Day 2023 LIVE: எல்லை கிராமங்கள்..!

இந்தியாவின் எல்லை கிராமங்கள் எல்லைகள் இல்லை அவைதான் இந்தியாவின் தொடக்கம் என பிரதமர் மோடி பேசிவருகிறார். 

Independence Day 2023 LIVE: கொடி ஏற்ற புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா..!

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற நிலையை உருவாக்க ஓய்வின்றி உழைத்து வருகிறோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: பெண்களுக்கு முக்கிய பங்கு..!

இஸ்ரோ தொடங்கி ஜி 20  நாடுகளின் மாநாடு வரை பெண்களுக்கு முக்கிய  உள்ளது என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: தொடர் குண்டு வெடிப்பு என்ற நிலை இந்தியாவில் இல்லை - சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி உரை..!

பாதுகாப்பு படையின் வலுவான சீர்திருத்தங்களால் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் என்ற நிலை இல்லை  என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: அடிக்கல் நாட்டுவதுடன் இல்லாமல்..!

அடிக்கல் நாட்டுவதுடன் இல்லாமல் அனைத்து திட்டங்களையும் நானே திறந்தும் வைக்கிறேன் என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: பாரம்பரிய திறன் கொண்டவர்களை ஊக்குவிக்க ரூ. 15 ஆயிரம் கோடி - பிரதமர் மோடி..!

பாரம்பரிய திறன் கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் ரூபாய் 13ஆயிரத்தில் இருந்து 15ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்ம திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: ஊழல் என்ற தடையை நீக்கி..!

ஊழல் என்ற தடையை நீக்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறோம் என பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 

Independence Day 2023 LIVE: வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டவர்கள்..!

இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் 12.5 கோடி பேர் வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என பிரதமர் மோடி பேசி வருகிறார். 

Independence Day 2023 LIVE: ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டம்..!

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தின் கீழ் நமது நாட்டில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 

Independence Day 2023 LIVE: சிறு நகரங்களையும் மேம்படுத்த நடவடிக்கை..!

டெல்லி, மும்பை, சென்னை மட்டுமின்றி சிறு நகரங்களையும் மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: விவசாயிகளுக்காக ரூ.10 லட்சம் கோடி செலவு..!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி செலவில் குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 

Independence Day 2023 LIVE: முத்ரா யோஜ்னா திட்டம்..!

முத்ரா யோஜ்னா திட்டம் மூலம் ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என பிரதமர் மோடி பேசி வருகிறார். 

Independence Day 2023 LIVE: சிறப்பாக செயல்படும் அமைச்சகங்கள்..!

எனது தலைமையிலான அமைச்சகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேசி வருகிறார். 

Independence Day 2023 LIVE: நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவேன்..!

நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள், உங்களுக்காக நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவேன் என பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 

Independence Day 2023 LIVE: சீர்திருத்தங்கள் செய்ய தைரியம்..!

பெரும்பான்மை அரசு அமைந்ததால் சீர்திருத்தங்கள் செய்ய எனக்கு தைரியம் பிறந்தது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: உலகத்தையே இந்தியா தான் வழிநடத்துகிறது - பிரதமர்

கொரோனாவிற்குப் பிறகு இந்தியாதான் உலகத்தையே வழிநடத்துகிறது என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Independence Day 2023 LIVE: உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்கள்..!

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியா உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Independence Day 2023 LIVE: நவீனத்தை நோக்கி இந்தியா..!

இந்தியா தற்போது நவீனத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது என குறிப்பிட்டுள்ளார். 

தொழில்நுட்ப புரட்சி..!

தொழில்நுட்பப் புரட்சியில் இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. 

Independence Day 2023 LIVE: டிஜிட்டல் இந்தியா திட்டம்..!

டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள உலகமே விரும்புகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சி..!

இளைஞர்கள்தான் நாட்டினை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்கின்றனர் என பிரதமர் மோடி உரை. 

அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு..!

30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் கொண்டுள்ள நாடு இந்தியா என பிரதமர் மோடி பேசி வருகிறார். 

Independence Day 2023 LIVE: உலகத்திற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கை..!

உலகத்திற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது என பிரதமர் மோடி பேசி வருகிறார். 

Independence Day 2023 LIVE: ஆயிரம் ஆண்டுகள் தாக்கம்..!

மத்திய அரசு தற்போது செயல்படுத்திவரும் திட்டங்கள் இந்தியாவில் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மணிப்பூர் பற்றிய பேசிய மோடி

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன

மன்மோகன் சிங்கை சமன் செய்த பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அதிக முறை தேசியக்கொடியை ஏற்றிய 3வது இந்திய பிரதமர் என்ற மன்மோகன்சிங்கின் சாதனையை சமன் செய்தார்.

தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி..!

77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

எதிர்பார்ப்பில் பிரதமர் மோடியின் உரை

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இன்றைய உரை மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது

Independence Day 2023 LIVE: பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்கும் பிரதமர்..!

பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பை சிவப்பு கம்பளத்தில் இருந்தவாறு பிரதமர் ஏற்கிறார். 

Independence Day 2023 LIVE: காந்தி நினைவிடத்தில் மரியாதை..!

டெல்லி ராஜ்கோர்ட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

Independence Day 2023 LIVE: செங்கோட்டைக்கு வந்த பிரதமர்..!

பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றிவைக்க செங்கோட்டைக்கு வந்துள்ளார். 

Background

77th Independence Day: நாட்டின் 77வது சுதந்திர தினக் கொண்டாட்ட விழா வெகு விமரிசையாக நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டுள்ளது.  அதேபோல் நாடு முழுவதும் மக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அண்டை நாட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார். 


செங்கோட்டையில் பட்டொளி வீசும் தேசியக் கொடி


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, முப்படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பை ஏற்கவிருக்கிறார். அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள், நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள், முப்படைத் தலைமை தளபதி, பாதுக்காப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் இந்த நாளில் மாநிலங்களின் சார்பில் சுதந்திர தின ஊர்திகளும் பொதுமக்கள் பார்வைக்கு  அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. 


 


செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றம்


தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், மாநிலத்தின் தலைநகராக உள்ள சென்னையில் அமைந்துள்ள மாநில சட்டப்பேரவையான செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 77வது சுதந்திரத்தை முன்னிட்டு கொடியேற்றவுள்ளார். கொடியேற்றம் முடிந்த பின்னர், மத்திய, மாநில பாதுகாப்பு வீரர்கள் நடத்தவுள்ள சாகச நிகழ்ச்சிகளை பார்க்கவுள்ளார். மேலும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் முதலமைச்சருக்கு கொடுக்கப்படவுள்ள அணிவகுப்பு மரியாதையியும் ஏற்கவுள்ளார். இதன் பின்னர் மாநில அரசு சார்பில் அறிவிக்கப்படுள்ள தகைசால் விருது, காவல் துறையில் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 


தேநீர் விருந்து புறக்கணிப்பு 


77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுநல சேவையில் ஈடுபட்டுவரும் சமூக நல ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த தேநீர் விருந்தை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக நேற்று அறிவித்திருந்தார். நீட் தேர்வு ரத்து செய்வதற்கான கோப்பில் ஆளுநர் ஒருபோதும் கையெழுத்து போடமாட்டேன் என அறிவித்ததையடுத்து முதலமைச்சர் புறக்கணிப்பு முடிவை எடுத்தார். இந்த விருந்தில் திமுக கூட்டணிக் கட்சிகளும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். 


இதேபோல் மாவட்டத் தலைநகரகங்களில் மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சிகளில் மேயர்கள் என நாடு முழுவதும் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றவுள்ளனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.