தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமித்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 






சித்ரா ராமகிருஷ்ணன் மீதான புகார்கள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரித்து வருகிறது. முன்னதாக,சித்ரா ராமகிருஷ்ணன் 2013 முதல் 2016 இடைப்பட்ட காலத்தில் தேசிய பங்குச் சந்தையின் (NSE) நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து விலகினார். 


சித்ரா ராமகிருஷ்ணன் இமயமலையில் வசிக்கும் ஆன்மீக குரு ஒருவருடன், பங்குச் சந்தையின் நிதிக் கணிப்புகள், வணிகத் திட்டங்கள் மற்றும் போர்டு நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.






சந்தை கட்டுப்பாட்டாளர்கள் இதை வினோதமான தவறான நடத்தை என்றும், விதிமுறைகளின் வெளிப்படையான மீறல் என்று அழைப்பர். என்எஸ்இ-யின் நிதி மற்றும் வணிகத் திட்டங்களைப் பகிர்ந்துகொள்வது கற்பனை செய்ய முடியாதது என்பதால் பங்குச் சந்தையின் அடித்தளத்தையே அசைக்கக் கூடிய செயல்" என்று செபி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சித்ரா ராம்கிருஷ்ணன் மற்றும் பிற உயர்மட்ட முன்னாள் தலைவர்களுக்கு செபி அபராதம் விதித்தது.


இமயமலையில் வசிக்கும் ஆன்மீக குருவின் செல்வாக்கின் கீழ் சித்ரா ராம்கிருஷ்ணா எடுத்த முடிவுகளில், எந்த மூலதன சந்தை அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்ற நிர்வாகியை ஆலோசகராகவும், NSE இன் இயக்க அதிகாரியாகவும் நியமித்தது தொடர்பாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண