அமைச்சரவையில் புதிய சாதனை
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக |4 பட்டியலின அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை என்ற பெருமையை பெற்றுள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தற்போதைய அமைச்சரவை. கோவி செழியன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், சி.வி.கணேசன் ஆகிய 4 பட்டியலின அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது உள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோவி செழியன்
தங்கம் விலை சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.56,640க்கும் ஒரு கிராம் ரூ.7,080க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது
தீக்குழிக்குள் தவறி விழுந்த பெண்
சென்னை வியாசர்பாடியில் உள்ள தீப்பாஞ்சம்மன் கோயிலில் தீ மிதிக்கும்போது பெண் ஒருவர் கால் தவறி விழுந்ததால் பரபரப்பு. அருகில் இருந்த தீயணைப்பு படையினர் உடனடியாக அவரை மீட்டதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். காயமடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் வியாசர்பாடி போலீசார் தீவிர விசாரணை
கல்லூரி மாணவர்களின் அசத்தல் முயற்சி
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரியின் ULOG 3 மாணவர் குழுவினர், ₹25,000 செலவில் தயாரிக்கப்பட்ட 500 கிராம் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோளை ஹீலியம் பலூன் உதவியுடன் வானில் பறக்கவிட்டனர. குறைந்த செலவில் செயற்கைக்கோர்களை விண்ணில் ஏவும் முயற்சியாக இதை செய்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு, மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி நடைபெற உள்ள தேசிய திரைப்பட விழாவில், மிதுன் சக்ரவர்த்திக்கு இந்த விருதினை வழங்கி மத்திய அரசு கவுரவிக்க உள்ளது.
ஹரியானா பாஜகவில் உட்கட்சி மோதல் தீவிரம்
ஹரியானாவில் வரும் அக்.5ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சீட் தராததால் |முதலமைச்சர் மற்றும் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம். முன்னாள் அமைச்சர்கள் ரஞ்சித் சவுதா, பச்சன் சிங் உள்ளிட்ட 8 பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்
மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க மருத்துவர்கள்
மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அம்மாநில மருத்துவர்கள் மீண்டும் போராட்டம். நேற்று இரவு மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள், பொதுமக்கள் இணைந்து பல இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி பேரணியை மேற்கொண்டனர்
தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது. கனமழையால் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன 42 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல்
தொடங்கியது 4வது நாள் ஆட்டம்
கான்பூரில் நடைபெறும் இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. மழை காரணமாக கடந்த இரண்டு நாட்கள் ஆட்டம், ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று மழை இல்லாததால், வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
அசத்தல் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. கடைசி ஒருநாள் போட்டியை டக்வொர்த் லூயிஸ் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. 4 விக்கெட் மற்றும் 31 ரன்கள் எடுத்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வு