Ideas of India 2023: பாஜக பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது - கவிதா கல்வகுண்ட்லா

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாட்டின் 2ஆவது நாள் நடைபெற்று வருகிறது.

சுதர்சன் Last Updated: 25 Feb 2023 09:55 PM
பாஜக பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது - கவிதா கல்வகுண்ட்லா

பாஜக பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது என பி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த கவிதா கல்வகுண்ட்லா தெரிவித்தார்


 

சிறந்த நிர்வாகம் மற்றும் மேம்பாடே எங்களது நோக்கம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சிறந்த நிர்வாகம் மற்றும் மேம்பாடே எங்களது நோக்கம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்

” கட்சி சின்னம், பெயர் தேவையில்லை; பாலாசாகேப்பின் சித்தாந்தங்கள் போதும் “ மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே

எங்களுக்கு கட்சி சின்னம் மற்றும் பெயர் தேவையில்லை. பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தங்கள் எங்களுக்கு போதும், அவரது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.


 

மத்திய அரசு, பிரதமரிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கிறது- மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே

மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கிறது என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.


 

திரைப்படங்களை உருவாக்குவது கள்ள சந்தையாக மாறியுள்ளது - இயக்குநர் சேகர் கபூர்

இந்தியாவில் ஒரு படம் எடுப்பது என்பது கள்ள சந்தை போல மாறி வருகிறது என, இயக்குநர் சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்றை வேதகால நாகரிகமாக நிறுவுவதே இந்திய அரசின் திட்டம்: வரலாற்றாசிரியர் வினய் லால்..!

"இந்திய அரசின் தற்போதைய திட்டமானது, இந்தியாவின் வரலாற்றை 5,000 ஆண்டுகளில் இருந்து 12,000 ஆண்டுகள் வரையில் இந்த நாகரிகம் அக்காலத்திலிருந்தே வேதகால நாகரிகமாக இருந்து வந்ததாகக் கூறுவதாகும்" என வரலாற்றாசிரியர் வினய் லால் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் வரலாற்றாசிரியர் வினய் லால்..!

மாநாட்டில் வரலாற்றாசிரியர் வினய் லால் பேசி வருகிறார்.

அதிகாரமிக்கவராக இருக்கும்போது அதீத நம்பிக்கை மிகவும் ஆபத்தானது: த்ரிஷ்டி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர்

"நீங்கள் ஒரு அதிகாரமிக்கவராக இருக்கும்போது அதீத நம்பிக்கை மிகவும் ஆபத்தானது. சாதாரண நிலையில் வாழ்கிறீர்கள் என்றால், நம்பிக்கையின்மை மிகவும் சிக்கலாக இருக்கலாம்" என த்ரிஷ்டி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் விகாஸ் திவ்யாகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குகிறேன் என்று நினைக்கவில்லை: த்ரிஷ்டி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர்

"நான் இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குகிறேன் என்று நினைக்கவில்லை, மாணவர்களை ஐஏஎஸ் படிப்பில் சேர மட்டுமே உதவுகிறேன்" என த்ரிஷ்டி ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் விகாஸ் திவ்யாகீர்த்தி தெரிவித்துள்ளார்.

வரலாற்றின் கைதிகள் அல்ல, வரலாற்றால்தான் வடிவமைக்கப்பட்டுள்ளோம்: வரலாற்றாசிரியர் மஹ்மூத் மம்தானி..!

"நாம் வரலாற்றின் கைதிகள் அல்ல, வரலாற்றால்தான் நாம் வடிவமைக்கப்பட்டுள்ளோம்" என வரலாற்றாசிரியர் மஹ்மூத் மம்தானி தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் வரலாற்றாசிரியர் மஹ்மூத் மம்தானி..!

மாநாட்டில் வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான மஹ்மூத் மம்தானி பேசி வருகிறார்.

இந்தியாவில் பலர் தரையில் இருந்து வானத்தை தொடத் தொடங்கியுள்ளனர்: கேலண்ட் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர்..!

"இந்தியாவில் பலர் தரையில் இருந்து வானம் என்ற எல்லையை தொடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், கேலண்ட் குழுவின் பயணம் தொடர்கிறது. கேலண்ட் குழுமத்தின் வளர்ச்சி திருப்தியாக உள்ளது" என கேலண்ட் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் கேலண்ட் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திர பிரகாஸ்..!

கேலண்ட் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்திர பிரகாஸ் அகர்வால் பேசி வருகிறார்.

பாடங்களை கற்று கொள்ளாவிட்டால் வெற்றியின் கடைசி படியில் காலடி வைக்க முடியாது: எஸ்பிஎஸ் குழும நிறுவனர்..!

"படிப்படியாகதான் வெற்றியை அடைய முடியும். வழியில் வரும் பாடங்களை நீங்கள் கற்க மாட்டீர்கள் என்றால், கடைசி பீடத்தில் காலடி எடுத்து வைக்க முடியாது" என எஸ்பிஎஸ் குழும நிறுவனர் சஞ்சீவ் ஜுனேஜா கூறியுள்ளார்.

போராட்டம் கற்றுக்கொடுப்பதை எந்த நிறுவனமும் கற்று தர முடியாது: எஸ்பிஎஸ் குழும நிறுவனர் சஞ்சீவ் ஜுனேஜா..!

"போராட்டம் உங்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது என்பதை எந்த நிறுவனமும் உங்களுக்குக் கற்பிக்க முடியாது" என எஸ்பிஎஸ் குழும நிறுவனர் சஞ்சீவ் ஜுனேஜா கூறியுள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் எஸ்பிஎஸ் குழும நிறுவனர் சஞ்சீவ் ஜுனேஜா..!

மாநாட்டில் எஸ்பிஎஸ் குழும நிறுவனர் சஞ்சீவ் ஜுனேஜா பேசி வருகிறார்.

இந்திய பாரம்பரிய இசைக்கும் கலாசாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது: சரோத் இசை கலைஞர் அமன் அலி பங்காஷ்..!

"இது கலாசாரத்துடன் தொடர்புடையது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், இசை என்பது பெரிய ஜாம்பவான்களான உஸ்தாத்கள்,  பண்டிதர்கள் ஆகியோரிடம் கற்று தெரிந்து கொள்வதை விட அதிகம். இது ஆன்மீகத்துடன் தொடர்புடையது. இந்திய பாரம்பரிய இசை ஆன்மீகத்துடன் தொடர்புடையது என்று நான் நினைக்கிறேன்" என சரோத் இசை கலைஞர் அமன் அலி பங்காஷ் தெரிவித்துள்ளார்.


 
மரணத்திற்கு அருகிலான அனுபவங்களைக் கூட கடந்து செல்ல வைத்தது இசை: பாரம்பரிய பாடகர் ஷுப் முத்கல்

"கடந்த 2 ஆண்டுகளில், மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவங்கள் உள்பட கடினமான காலங்களை கடந்து செல்ல வைத்தது இசையின் தோழமை. இசையின் தோழமை பிரச்னையில் இருந்து விடுவித்து ஆதரவை வழங்குவது சாத்தியம்" என பாரம்பரிய பாடகர் ஷுப் முத்கல் கூறியுள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் தாள இசைக் கலைஞர் பிக்ரம் கோஷ்..!

தாள இசைக் கலைஞர் பிக்ரம் கோஷ், பாரம்பரிய பாடகர் ஷுப் முத்கல், சரோத் கலைஞர்கள் அமன் அலி பங்காஷ் மற்றும் அயன் அலி பங்காஷ் ஆகியோர் மாநாட்டில் பேசி வருகின்றனர்.

எந்த ஒரு கட்டமைப்புக்குள்ளும் இந்தியாவை வரையறுக்க விருப்பம் இல்லை: இயக்குநர் நந்திதா தாஸ்..!

"இந்தியா என்பது ஒரே இந்தியா அல்ல. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. ஆனால், நான் வளர்ந்த இந்தியாவில் வேறு. எந்த ஒரு கட்டமைப்புக்குள்ளும் அதை வரையறுக்க விருப்பம் இல்லை. ஏனென்றால், நீங்கள் வரையறுப்பதன் மூலம் அதை வரையறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இருந்ததில்லை.


இந்தியாவில் அனைத்து விதமான கருத்துகளும் உள்ளன. அங்கு, மிகவும் முற்போக்கான யோசனைகளும் இருக்கும். மேலும் உங்களிடம் மிகவும் பாரம்பரியமான மற்றும் பிற்போக்குத்தனமான யோசனைகள் இருக்கும்" என இயக்குநர் நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.

என்னை மிகவும் பாதித்தது இதுதான்: குஜராத் படுகொலை குறித்து இயக்குநர் நந்திதா தாஸ் பேச்சு...!   

"நான் ஒரு தயக்கமான நடிகையாக இருந்தேன். முடிவை கொண்டு வருவதற்கான ஒரு வழி திரைப்படம் என எண்ணிய நடிகை.


அது எனது படங்களின் மூலமாகவும், அது வழங்கும் மேடை மூலமாகவும் விஷயங்களைப் பற்றி பேச எனக்கு வாய்ப்புகளைத் தருகிறது. ஆனால், நீங்கள் பலதரப்பட்ட செட்களில் இருக்கும்போது 'சொல்லப்படும் கதையை என்னால் சிறப்பாகச் சொல்ல முடியும்' என்று நீங்கள் நினைக்கும் போது, ​​சில சமயங்களில் நான் அதை உணர்ந்தேன். சில கதைகளை கேட்டால் இதையே சொல்லியே ஆக வேண்டும் என உங்களை கட்டாயப்படுத்தும்.


என்னைப் பொறுத்தவரை, 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலைக்குப் பிறகு எனது முதல் திரைப்படம் 'ஃபிராக்' வந்தது. அந்த வன்முறையின் படங்களை நாங்கள் தொலைக்காட்சியில் முதன்முதலில் பார்த்தோம். என்னை மிகவும் பாதித்தது என்னவென்றால், வன்முறைகள் முடிந்த பிறகும், அனைத்தும் தொடர்வதுதான்" என இயக்குநரும் நடிகையுமான நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் இயக்குநர் நந்திதா தாஸ்..!

இயக்குநரும் நடிகையுமான நந்திதா தாஸ், இயக்குநர் நந்திதா தாஸ் ஆகியோர் பேசி வருகின்றனர்.

பெரிய லட்சியம் உள்ளது: மனம் திறந்த ஓலா இணை நிறுவனர்..!

"எங்களுக்கு பெரிய லட்சியம் உள்ளது. நிறைய பணம் சேர்த்துள்ளோம். வியாபாரமும் வளர்ந்துள்ளது. இன்று, ஓலாவுக்கு மூன்று வியாபாரங்கள் உள்ளன. ஓலா கேப் வியாபாரம் லாபகரமானது" என ஓலா இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

வேலையைச் செய்வதில் மட்டும் எனக்கு திருப்தி கிடைக்கவில்லை: வெற்றியின் ரகசியத்தை சொன்ன ஓலா இணை நிறுவனர்..!

"ஒரு வேலையைச் செய்வதில் மட்டும் எனக்கு திருப்தி இல்லை. அடிப்படையில் நான் விரும்புவதை கட்டமைக்க இன்னும் ஆக்கப்பூர்வமான நிறுவனத்தை தொடங்க விரும்பினேன்" என ஓலா இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்: ஓலா இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால்

"நான் லூதியானாவில் இருந்து வருகிறேன். நாங்கள் மிகவும் நடுத்தர வர்க்க வளர்ப்பில் வளர்க்கப்பட்டோம். நாங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எண்ணினோம். நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்" என ஓலா இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் ஓலா இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால்..!

ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் பேசி வருகிறார்.

மரபியல் ரீதியாக மனிதர்கள் கொலை செய்வதற்கான ஏற்பாட்டுடன் உருவாக்கப்படவில்லை: உளவியலாளர் ஆஷிஷ் நந்தி..!

மரபியல் ரீதியாக மனிதர்கள் கொலை செய்வதற்கான ஏற்பாட்டுடன் உருவாக்கப்படவில்லை என உளவியலாளர் ஆஷிஷ் நந்தி கூறியுள்ளார்.

சைக்கோக்கள் பெரும்பாலும் மனநோயாளிகளாக உள்ளனர்: உளவியலாளர் ஆஷிஷ் நந்தி

"சைக்கோக்கள் பெரும்பாலும் மனநோயாளிகளாக உள்ளனர். கொலைக்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்" என உளவியலாளர் ஆஷிஷ் நந்தி தெரிவித்துள்ளார்.

பிரிவினை கால கொலையாளிகளை ஆய்வுக்காக சந்தித்தேன்: உளவியலாளர் ஆஷிஷ் நந்தி

"பிரிவினையில் ஏற்பட்ட வன்முறை பற்றிய எனது ஆய்வில், நாங்கள் பல கொலையாளிகளை சந்தித்தோம். 20-25 ஆண்டுகளில், ஒரு கொலையாளியை மட்டுமே சாதாரணமாக செயல்படும் நபராகத் தோன்றினார். மீதமுள்ளவர்கள், நான் எதிர்பார்த்தபடி வெவ்வேறு விதமான கொலையாளிகளாக உள்ளனர்" என உளவியலாளர் ஆஷிஷ் நந்தி தெரிவித்துள்ளார்.

உரையாற்றி வரும் உளவியலாளர் ஆஷிஷ் நந்தி..!

மாநாட்டில் உளவியலாளரும் சமூகவியலாளருமான ஆஷிஷ் நந்தி பேசி வருகிறார். 

முதல் தேர்வில் பூஜ்ய மதிப்பெண்ணை பெற்றேன்: ஆசிரியர் நிதின் விஜய்

"நான் ஐஐடிக்கு தயாராகும் போது இயற்பியலுக்காக பயந்தேன். எனது முதல் தேர்வில் 0 மதிப்பெண் பெற்றேன். நான் கடினமாக உழைத்தேன். இப்போது ஒவ்வொரு மாணவரும் முழு மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்" என ஆசிரியர் நிதின் விஜய் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் உரையாற்றி வரும் மோஷன் எடுக்கேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி..!

மாநாட்டின் 2ஆவது நாளான இன்று மோஷன் எடுக்கேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான நிதின் விஜய் பேசி வருகிறார்.

கடலில் மூழ்குகிறதா மும்பை..? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட எழுத்தாளர் அமிதவ் கோஷ்..!

"காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான தாக்கங்கள் என்னவென்றால், அரேபிய கடல் நம்பமுடியாத அளவிற்கு வேகமாக வெப்பமடைகிறது. வங்காள விரிகுடாவும் வேகமாக வெப்பமடைகிறது. ஆனால் அரபிக் கடல் இன்னும் வேகமாக வெப்பமடைகிறது. எனவே, சூறாவளிகள் அடிப்படையில் வெப்ப இயந்திரங்கள். கடந்த 10 ஆண்டுகளில், அரபிக் கடல் பகுதியில் பல சூறாவளிகள் ஏற்பட்டுள்ளதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.


4 அல்லது 5 சூறாவளி மும்பையைத் தாக்கினால் என்ன நடக்கும். மும்பைக்கு பாதுகாப்பே இல்லை. மும்பையை ஒரு பெரிய புயல் தாக்கினால். அது பேரழிவை ஏற்படுத்தும்" என எழுத்தாளர் அமிதவ் கோஷ் தெரிவித்துள்ளார்.

மெதுவான வன்முறையாக நிகழும் காலநிலை மாற்றம்:  எழுத்தாளர் அமிதவ் கோஷ்

"காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள சிரமம் என்னவென்றால், காலநிலை மாற்றம் எப்போதுமே தீவிர நிகழ்வுகளில் வெளிப்படுவதில்லை. மாறாக இது மெதுவான வன்முறையாக நிகழ்கிறது. அப்படிதான் அழைக்கிறோம். மக்கள் நீண்ட காலமாக தங்கள் நிலங்களை விட்டு விரட்டப்படுகிறார்கள். மேலும் இந்தியாவில் நம்பமுடியாத மக்கள்தொகை மாற்றம் ஏற்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக பெரும்பாலும் கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்படுகிறது" என எழுத்தாளர் அமிதவ் கோஷ் தெரிவித்துள்ளார்.

இறப்பை போல காலநிலை மாற்றமும் நிஜமாக உள்ளது: அமிதவ் கோஷ்

இறப்பு எப்படி நிஜமாக உள்ளதோ அதே போல காலநிலை மாற்றமும் நிஜமாக உள்ளது என எழுத்தாளர் அமிதவ் கோஷ் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஆளாக உரையாற்றி வரும் எழுத்தாளர் அமிதவ் கோஷ்..!

காலநிலை நெருக்கடி குறித்து எழுத்தாளர் அமிதவ் கோஷ் உரையாற்றி வருகிறார்.

மருமகன் ரிஷி சுனக்கிற்கு அட்வைஸ் கொடுத்தேனா? மனம் திறந்த நாராயண மூர்த்தி..!

பிரிட்டன் பிரதமரும் மருமகனுமான ரிஷி சுனக்கிற்கு அட்வைஸ் கொடுத்தீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் வெளிநாட்டவர். அவர் அரசியலில் சேர விருப்பம் தெரிவித்தபோது, நானும் அவரது பெற்றோர்களும் ரிஷி சுனக்கின் அரசியல் வாழ்க்கை குறித்து பேச கூடாது என்ற முடிவை எடுத்தோம்" என நாராயண மூர்த்தி பதில் அளித்தார்.

நினைத்துப் பார்க்காத ஐடியாக்களை தொழில் முனைவோர் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்: நாராயண மூர்த்தி..!

"நாட்டின் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் எங்கும் நினைத்துப் பார்க்காத ஐடியாக்களை தொழில் முனைவோர் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். பிரச்னைகளை நமது பிரச்னைகளாக எண்ணி அதை பற்றி சிந்திக்கத் தொடங்கும் முதல் நபராக நாம் இருப்போம்" என நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.

வாசுதேவ குடும்பத்தை குறிக்கும் நாடாக இந்தியா அறியப்பட வேண்டும்: நாராயண மூர்த்தி..!

"வாசுதேவ குடும்பத்தை குறிக்கும் நாடாக இந்தியா அறியப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். இந்தியாவின் தலைமை அசாதாரண கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். நாம் ஞானம் கொண்டவர்களாக, கருணை கொண்டவர்களாக, வாய்ப்புகளைப் பெறுவதில் சிறப்பாகச் செயல்படுபவர்களாக  நடந்து கொள்ள வேண்டும்" என நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? விளக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி..!

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து உரையாற்றி கொண்டிருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர் என். ஆர். நாராயண மூர்த்தி.

முதல் ஆளாக உரையாற்ற உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனர் என். ஆர். நாராயண மூர்த்தி..!

மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, முதல் ஆளாக இன்ஃபோசிஸ் நிறுவனர் என். ஆர். நாராயண மூர்த்தி கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.

Background

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வில் பங்கேற்று பேசிய டெல்லி முதலமைச்சர், துணை முதலமைச்சர் சிசோடியா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.


இவ்விழாவில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா ஒரு 'பொய்' வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.


டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்படுவார் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2ஆவது மாநாட்டின் முதல் நாளான நேற்று, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ், முன்னாள் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தர், பாடகர்கள் லக்கி அலி மற்றும் சுபா முத்கல், எழுத்தாளர்கள் தேவ்தத் பட்டநாயக், நடிகைகள் சாரா அலி கான், ஜீனத் அமன், நடிகர்கள்  ஆயுஷ்மான் குரானா மற்றும் மனோஜ் வாஜ்பாய், பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா, விளையாட்டு நட்சத்திரங்கள் ஜ்வாலா குப்தா மற்றும் வினேஷ் போகட் ஆகியோரும் முக்கிய தலைப்புகளில் உரையாற்றினர்.


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டை நேரலையாக பார்ப்பது எப்படி?


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாடு, ABP live youtube சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.


ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சிமாநாட்டின் அமர்வுகள் ஏபிபி நெட்வொர்க்கின் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது.


சிக்கலான உலக சூழல்:


இந்தியாவை பொறுத்தமட்டில்  2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளது. உலக வரலாற்றில் இத்தகைய தருணத்தில் இந்தியா எங்கே நிற்கிறது? என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒன்பது மாநிலங்களுக்கான தேர்தல், எழுச்சி பெற்ற தென்னிந்தியா, புத்துயிர் பெற்ற எதிர்ப்பரசியல் என உலகில் முக்கியமான அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இந்த உச்ச மாநாடு நடைபெற்று வருகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.