Ideas of India 2023 LIVE: ஒரு கட்சி எப்பொழுதும் தேர்தலை மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறது; நாங்கள் நாடு குறித்து சிந்தித்து கொண்டிருக்கிறோம்-அரவிந்த் கெஜ்ரிவால்

Ideas of India Summit 2023 Live: ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா இரண்டாவது பதிப்பு உலகளவில் அசாதாரணமான குழப்பத்திற்கு மத்தியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ABP NADU Last Updated: 24 Feb 2023 10:46 PM
ஒரு கட்சி எப்பொழுதும் தேர்தலை மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறது; நாங்கள் நாடு குறித்து சிந்தித்து கொண்டிருக்கிறோம்- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

ஒரு கட்சி எப்பொழுதும் தேர்தலை மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறது. அது நாட்டுக்கு எதுவும் செய்வது கிடையாது. ஆனால், நாங்கள் எப்பொழுதும் தேர்தலை பற்றி நினைப்பது கிடையாது. நாங்கள் நாடு குறித்து சிந்தித்து கொண்டிருக்கிறோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்தியாவை நம்பர் ஒன் நாடாக பார்க்க ஆசை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவை நம்பர் ஒன் நாடாக பார்க்க ஆசை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

”வெவ்வேறு படங்களிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிப்பேன்” - நடிகை சாரா அலிகான்

நான் எப்போதும் வெவ்வேறு படங்களிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிப்பேன்" என நடிகை சாரா அலிகான் தெரிவித்தார்.


 

எனக்கு ரிஸ்க் எடுப்பது மிகவும் பிடிக்கும் - பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா

எனக்கு ரிஸ்க் எடுப்பது மிகவும் பிடிக்கும். என்னால் புதிய விஷயங்களை முயற்சி செய்யாமல் இருக்க முடியாது என பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தெரிவித்தார். 

முன்பு இருந்ததை விட இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன - நடிகர் ஆயுஷ்மான் குரானா

நீங்கள் திறமையானவராக இருந்தால் பிரகாசிக்க முடியும். சில வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன என பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தெரிவித்தார்.

’திறமை மிக முக்கியம்'- இந்தியன் ஐடல் சிங்கர் பிரபலம் ரிஷி சிங்

'திறமை மிக முக்கியம்' என  முறையான பயிற்சி இல்லாமல் பாடும் வல்லமை கொண்ட இந்தியன் ஐடல் சிங்கர் பிரபலம் ரிஷி சிங் தெரிவித்தார்.


 

கடுமையாக உழையுங்கள்; மகிழ்ச்சியாகவும் இருங்கள் - பின்னணி பாடகி ஷில்பா ராவ்

கடுமையாக உழையுங்கள் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருங்கள் என பின்னணி பாடகி ஷில்பா ராவ் தெரிவித்தார்.

"போதைப்பொருள் பிரச்னைக்கு வேலைவாய்ப்பு மிகப்பெரிய தீர்வாகும்" - பகவந்த் மான்

பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்னைக்கு வேலைவாய்ப்பு மிகப்பெரிய தீர்வாக அமையும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.


 

ட்ரோன் மூலம் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தொழில்நுட்பம் உருவாக்க வேண்டும் - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன்

போதைப் பொருட்கள் தடுப்பது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் தெரிவிக்கையில், ட்ரோன் மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை "மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.


 

குடிப்பழக்கத்துக்கு பிறகே அனைத்து தவறான முடிவுகளையும் எடுத்தேன் - எழுத்தாளர் ஜாவேத் அக்தர்

குடிப்பழக்குத்தை விட்டு வெளியேறியது குறித்து எழுத்தாளர் ஜாவேத் அக்தர் தெரிவிக்கையில், குடிப்பழக்கத்துக்கு பிறகே அனைத்து தவறான முடிவுகளையும் எடுத்தேன் என எழுத்தாளர் ஜாவேத் அக்தர் தெரிவித்தார்.


 

"பாகிஸ்தான் உருவாக்கம் காரணமற்றது" - எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்

பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட விதமானது காரணமற்ற முறையில் இல்லை எனவும் மதம் நாட்டை உருவாக்குவதில்லை எனவும் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.

பெரிய பங்களா, மெர்சிடிஸ் காரை வாங்க நடிக்கவில்லை: ஃபேமிலி மேன் புகழ் மனோஜ் பாஜ்பாய்

"எனக்கு நடிப்பு ரொம்ப பிடிக்கும். பெரிய பங்களா, மெர்சிடிஸ் காரை வாங்க நடிக்க ஆரம்பிக்கவில்லை. 19 வயது இளைஞன் காதலில் விழுவது போல நடிப்பை காதலிக்கிறேன்" என ஃபேமிலி மேன் புகழ் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

நானும் என் மனைவியும் 'ஐ லவ் யூ' சொல்லி கொண்டதே இல்லை: மனம் திறந்த நடிகர் மனோஜ் பாஜ்பாய்..!

"என மனதளவில் கிராமப்புற சிறுவனாகவே உள்ளேன். விரும்பிய பெண்ணிடமும் சென்று என்னால் பேச முடியாது. டேட்டிங் செய்ய ஆரம்பித்ததிலிருந்து 'ஐ லவ் யூ' என்று நானும் என் மனைவியும் சொன்னதில்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்பதையும் என் தாய் மொழியையும் ஒருபோதும் மறைக்கக்கூடாது என்ற முடிவை எடுத்தேன்" என பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

107 கோடி ரூபாய் ஊதியத்தை நிராகரித்தது குறித்து மனம் திறந்த ஆசிரியர் கான் சார்..!

107 கோடி ரூபாய் ஊதியம் கொண்ட வேலை வாய்ப்பை நிராகரித்தது குறித்து பேசிய கான் சார், "மாணவர்களின் அன்பை பணத்தால் வாங்க முடியாது" என பதில் அளித்துள்ளார்.

ஒரு தொழிலாளியின் மகன் குவாண்டம் இயற்பியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எனது கனவு: கான் சார் பேச்சு..!

"இந்தி மீடியத்திற்காக ஆங்கில மீடியத்தை விட்டதே என் வாழ்க்கையின் சிறந்த முடிவு. ஒரு தொழிலாளியின் மகன் குவாண்டம் இயற்பியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எனது கனவு. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த நண்பர்களாக பாவிக்கிறோம்" என கான் சார் தெரிவித்துள்ளார்.

இளம் இந்தியா என்ற தலைப்பில் பேசி வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான கான் சார்..!

ஆசிரியரும் சமூக ஆர்வலருமான கான் சார் மாநாட்டில் பேசி வருகிறார்.

கற்றலும் ஆர்வமும் இல்லாத கல்வி வீண்: தன்னம்பிக்கை பேச்சாளர் அவாத் ஒஜா..!

"1920களில், காந்தி இந்தியாவுக்கு வந்தார். அவர் மக்களின் நலன்களைக் கண்டறிய வேண்டும் என்பதை புரிந்து கொண்டார். அவர் உள்ளூர் பிரச்சினைகளை தேசிய மேடையில் பேசினார். கற்றலும் ஆர்வமும் இல்லாத கல்வி வீண்" என தன்னம்பிக்கை பேச்சாளர் அவாத் ஒஜா கூறியுள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் ஆசிரியரும் தன்னம்பிக்கை பேச்சாளருமான அவாத் ஒஜா..!

ரினைசன்ஸ் அண்ட் யூத் கல்வி மையத்தின் நிறுவனரும் ஆசிரியருமான அவாத் ஒஜா மாநாட்டில் பேசி வருகிறார்.

உலகின் முக்கிய ரயில் தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக இந்தியா மாறும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!

"வந்தே பாரத் பற்றிய கட்டுரைகள் 18 நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால், இந்தியா இன்னும் மூன்று ஆண்டுகளில் உலகின் முக்கிய ரயில் தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக மாறும்" என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வேயுடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்ட பிரதமர் மோடி: ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!

எதிர்காலத்தில் எழும்பூர் உள்பட நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் எப்படி இருக்கும் என்பதை புகைப்படங்களாக காட்டிய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ரயில்வேயுடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்ட பிரதமர் மோடி, முழு நகரத்தையும் அதனுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்" எனக் கூறியுள்ளார். 

மாநாட்டில் பேசி வரும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!

பயணிகள் ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசி வருகிறார்.

பணவீக்கத்திற்கும் பணவியல் கொள்கைக்கும் சம்பந்தமில்லை: சர்வதேச நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர்..!

"கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் பணவீக்கத்தை எதிர்கொள்ள இந்தியா அதன் பணவியல் கொள்கையை கடுமையாக்கி வந்திருக்கிறது. இதுவே அதன் பதிலாக இருந்துள்ளது. பணவியல் கொள்கை விநியோகத்துடன் சிறிய தொடர்பையே கொண்டுள்ளது. பணவீக்கத்துடன் பணக் கொள்கைக்கு சிறிதும் சம்பந்தமில்லை என்று நான் கூறுவேன்" என சர்வதேச நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சுர்ஜித் சிங் பல்லா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் முன்னேறிய நாடுகளே பொருளாதார மந்தநிலையால் பாதிப்புக்கு உள்ளாகும்: சிஆர்ஐஎஸ்ஐஎல் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர்..!

"2022-23இல் நாம் காணப்போகும் வளர்ச்சி 7% இலிருந்து குறையப்போகிறது. அடுத்த ஆண்டு 6 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்பது எங்களின் கணிப்பு. உலகப் பொருளாதாரங்கள் மந்தமாகி வருகின்றன. அது நமக்குப் பெருகப் போகிறது. பெரும்பாலும் முன்னேறிய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாக போகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தீவிர வட்டி விகித இறுக்கம் அந்த பொருளாதாரங்களை மெதுவாக்கும்" என சிஆர்ஐஎஸ்ஐஎல் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தர்மகீர்த்தி ஜோஷி தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் சுர்ஜித் சிங் பல்லா..!

உலக பொருளாதாரம் குறித்து சர்வதேச நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் பொருளாதார அறிஞருமான சுர்ஜித் சிங் பல்லா, சிஆர்ஐஎஸ்ஐஎல் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தர்மகீர்த்தி ஜோஷி ஆகியோர் உரையாடி வருகின்றனர்.


 


 
ராஜ் கபூருடன் தனிப்பட்ட உறவு எதுவும் இல்லை: ஜீனா அமன்

"ராஜ் கபூருடன் தனிப்பட்ட உறவு இல்லை. அவர் எப்போதும் என்னை வெள்ளை உடையை அணியச் சொன்னதில்லை. விஷயங்களை சுவாரஸ்யமாக்குவதற்காக ஒரு கதை உருவாக்கப்பட்டது" என ஜீனா அமன் தெரிவித்துள்ளார்.

மோசமான திருமணத்தை விட, திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது: நடிகை ஜீனா அமன்..!

"மோசமான திருமணத்தை விட, திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது" என நடிகை ஜீனா அமன் கூறியுள்ளார்.


 
திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதில் மகிழ்ச்சி: மனம் திறந்த ஆஷா பரேக்..!

திருமணம் குறித்து கேள்விக்கு, "திருமணங்கள் விதியாகிவிட்டன. நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என நடிகை ஆஷா பரேக் பதில் அளித்துள்ளார்.

என்னை பார்த்து ஹீரோக்கள் பயந்தார்கள்: பழம்பெரும் நடிகை ஆஷா பரேக் 

ஹீரோக்கள் பயந்துபோய் என்னிடம் பேச வரவில்லை என பழம்பெரும் நடிகை ஆஷா பரேக் கூறியுள்ளார்.

இயக்குநர் நசீர் ஹுசைனுக்கு உத்வேகமாக இருந்தவர் ஆஷா பரேக்: நடிகை ஜீனா அமன்

இயக்குநர் நசீர் ஹுசைனுக்கு உத்வேகமாக இருந்தவர் நடிகை ஆஷா பரேக் என நடிகை ஜீனா அமன் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் பழம்பெரும் நடிகைகள் ஆஷா பரேக், ஜீனா அமன்..!

மாநாட்டில் பழம்பெரும் நடிகைகள் ஆஷா பரேக், ஜீனா அமன் ஆகியோர் பேசி வருகின்றனர்.


 
தோல்வி எல்லாவற்றுக்கும் முடிவல்ல: பாடகர் லக்கி அலி உருக்கம்..!

"தோல்வி எல்லாவற்றுக்கும் முடிவல்ல, தோல்விக்கு பயப்பட வேண்டாம். தோல்வி நேர்மறையானது, நீங்கள் தோல்வியடையவில்லை என்றால், நீங்கள் வளரவில்லை என்று அர்த்தம்" என பாடகரும் நடிகரும் பாடலாசிரியருமான லக்கி அலி தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் நடிகரும் பாடகருமான லக்கி அலி..!

மாநாட்டில் பாடகரும் நடிகரும் பாடலாசிரியருமான லக்கி அலி பேசி வருகிறார்.

ஜனநாயகம் ஒரு நம்பிக்கை: தேவ்தத் பட்நாயக்..!

"எதேச்சதிகாரத்தைப் போலவே ஜனநாயகமும் ஒரு நம்பிக்கை. 1000 பேர் ஒன்று கூடினால் விவாதித்து தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். ஜனநாயகம் இயற்கையானது அல்ல. அது ஒரு கலாச்சார நிகழ்வு. ரோம் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. சீனப் பேரரசுகள் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாம் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை" என புராண ஆய்வாளர் தேவ்தத் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை நம்புகிறவன் முட்டாள்: தேவ்தத் பட்நாயக்..!

"முட்டாள் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை நம்புகிறான். அதுவே அறிவின் ஆதாரங்கள் என நம்புகிறான்" என புராண ஆய்வாளர் தேவ்தத் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வரலாற்றையும் வரலாற்று புனைகதைகளையும் மக்கள் வேறுபடுத்துவதில்லை: புராண ஆய்வாளர் தேவ்தத் பட்நாயக்..!

அறிவியல் மற்றும் அறிவியல் புனைகதை, வரலாறு மற்றும் வரலாற்று புனைகதை, புராணம் மற்றும் புராண புனைகதைகளை மக்கள் வேறுபடுத்துவதில்லை என புராண ஆய்வாளர் தேவ்தத் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசி வரும் புராண ஆய்வாளர் தேவ்தத் பட்நாயக்..!

புராணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் எழுத்தாளரும் பேச்சாளருமான தேவ்தத் பட்நாயக் மாநாட்டில் பேசி வருகிறார்.

இந்தியாவில் கார் விற்பனை அதிகரிக்கும்: மாருதி சுசுகி எஸ்.இ.ஒ எதிர்பார்ப்பு..!

இந்தியாவில் கார் விற்பனை குறித்து பேசிய மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, "இந்தியாவில் கார் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும். 2030ல் இது 6 மில்லியனாக உயரும் என மாருதி எதிர்பார்க்கிறது" என்றார்.

இந்தியப் பொருளாதாரத்தில் மாருதியின் பங்களிப்பில் பெருமைப்படுகிறோம்: மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி..!

மாநாட்டில் பேசி வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, "கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் மாருதியின் பங்களிப்பில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்" என்றார்.

மாநாட்டில் பேசி வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா..!

மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா மாநாட்டில் பேசி வருகிறார்.

இந்தியர்களும் ஜப்பானியர்களும் ஒருவரை ஒருவர் எளிதாக புரிந்து கொள்ள முடியும்: ஜப்பான் தூதர்..!

இந்தியர்களும் ஜப்பானியர்களும் ஒருவரை ஒருவர் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என ஜப்பான் தூதர் யசுகாதா ஃபுகாஹோரி தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் மூன்றாவது ஆளாக பேசி வரும் ஜப்பான் தூதர் யசுகாதா ஃபுகாஹோரி..!

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டில் மூன்றாவது ஆளாக மும்பையில் உள்ள ஜப்பான் தூதர் யசுகாதா ஃபுகாஹோரி பேசி வருகிறார்.

சாதிக் குழுக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய எந்த முயற்சிகளையும் விரும்பவில்லை: ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர்..!

"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் ரீதியானது. அனைத்து தரப்பினரும் வளர வேண்டும். சமூகத்தில் சாதிக் குழுக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய எந்த முயற்சிகளையும் நாங்கள் விரும்பவில்லை. சாதி அடையாளங்கள் பலபடுத்தப்படக்கூடாது" என ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால் தெரிவித்துள்ளார்.

எதிர்கால பிரதமர் வேட்பாளரா உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்? ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் பதில்..!

எதிர்கால பிரதமர் வேட்பாளரா உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து வருகிறார் ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால்.

மக்கள்தொகையில் ஏற்பட்டு வரும் ஆபத்தான மாற்றம்: ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால் எச்சரிக்கை..!

"மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியமானது. இது நாட்டின் நிலை தொடர்பாக விளக்குகிறது. மக்கள்தொகையில் ஏற்பட்டு வரும் ஆபத்தான மாற்றத்தின் போக்கைக் அது உணர்த்தலாம்"  என ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தனது பாதையை சரி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால்..!

"இந்தியா மீது பாகிஸ்தான் 4 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் தனது பாதையை சரி செய்ய வேண்டும்" என ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது: ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால்..!

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் வாழ்க்கை மேம்பட்டு வருவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஆளாக உரையாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால்

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டில் இரண்டாவது ஆளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொது செயலாளர் கிருஷ்ணா கோபால் உரையாற்றி வருகிறார்.

சுதந்திரமான வாழ்க்கை முறையை கெடுக்க சீனாவின் பொருளாதாரம் பயன்படுகிறது: லிஸ் டிரஸ்

சீனா குறித்து பேசிய லிஸ் டிரஸ், "பொருளாதார சுதந்திரம் கிடைத்தால், சீனா சுதந்திரம் அடையும் என்ற அறிவற்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், சுதந்திரமான வாழ்க்கை முறையை கெடுக்க சீனாவின் பொருளாதாரம் பயன்படுகிறது"

எதிர்காலத்திற்கான மிகப்பெரிய நம்பிக்கை: இந்தியாவுக்கு லிஸ் டிரஸ் பாராட்டு..!

இந்தியா குறித்து பேசியுள்ள லிஸ் டிரஸ், "இந்தியாவில், நமது எதிர்காலத்திற்கான மிகப்பெரிய நம்பிக்கையை நாம் காண்கிறோம். வேகமாக வளர்ந்து வரும் சுதந்திர ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது" என்றார்.

சுதந்திரத்தை பாராட்ட தவறவிட்டோம்: லிஸ் டிரஸ்

உக்ரைன் போர் குறித்து விரிவாக பேசி வரும் லிஸ் டிரஸ், "மேற்குலகில் நாம் மனநிறைவு அடைந்தோம். சுதந்திரத்தை பாராட்ட தவறவிட்டோம். நாம் முன்னரே செயல்பட்டிருக்க வேண்டும். உக்ரைன் அவர்கள் கேட்டபோது நேட்டோவுடன் சேர அனுமதித்திருக்க வேண்டும். எண்ணெய், எரிவாயு மற்றும் தன்னலமாக செயல்பட்டு வரும் ரஷிய ஆட்சியாளர்கள் ஐரோப்பாவிற்கு தரும் நிதி ஆகியவற்றிற்காக நாம் ரஷ்யாவைச் சார்ந்திருக்க கூடாது என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்" என்றார்.

நேட்டோவில் இணைய உக்ரைனை அனுமதித்திருக்க வேண்டும்: பிரிட்டன் முன்னாள் பிரதமர்

நேட்டோவில் இணைய உக்ரைன் அனுமதி கேட்டிருந்தபோது அதை அனுமதித்திருக்க வேண்டும் என பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

முதல் ஆளாக உரையாற்றி வரும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்..!

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டில் முதல் ஆளாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் உரையாற்றி வருகிறார்.

இசையுடன் தொடங்கிய ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா மாநாடு..!

சரஸ்வதி வந்தனா பாடலை பிரபல பாடகர் சஞ்சீவனி பெலாண்டேவும் அவரது குழுவினரும் பாடி வருகின்றனர்.


 
மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து ஏபிபி நெட்வொர்க்கின் அவினாஷ் பாண்டே உரையாற்றினார்..!

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து ஏபிபி நெட்வொர்க்கின் அவினாஷ் பாண்டே உரையாற்றினார்.

குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ், ஏபிபி நெட்வொர்க்கின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே ஆகியோர் மாநாட்டை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

40 அமர்வுகள்...பல்துறைகளில் சிறந்து விளங்கும் 60 பேர்...ABP நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆப் இந்தியா மாநாடு..!

அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 60 பேர், கிட்டத்தட்ட 40 அமர்வுகளில் கலந்து கொண்டு புதிய இந்தியா குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா நேரலையில் காண:
Ideas of India Live: ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டை நேரலையாக பார்ப்பது எப்படி?

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாடு,  ABP Live YouTube சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.


ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சிமாநாட்டின் அமர்வுகள் ஏபிபி நெட்வொர்க்கின் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது.

Ideas of India Live: ஐடியாஸ் ஆப் இந்தியா 2ஆவது உச்சி மாநாடு எப்போது நடைபெறுகிறது?

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டின் இரண்டாவது பதிப்பு இன்றும் (பிப்ரவரி 24) நாளையும் (பிப்ரவரி 25) நடைபெறுகிறது.

Ideas of India Live: ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா.. இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது..!

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆப் இந்தியா உச்சி மாநாடு, இந்தாண்டும் வெகு விமரிசையாக நடத்தப்பட உள்ளது. "புதிய இந்தியா: உள்நோக்கி பார்த்து அணுகுவது" என்பது இந்தாண்டு தீம் பொருளாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

Background

Ideas of India Summit 2023 Live: ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா இரண்டாவது பதிப்பு உலகளவில் அசாதாரணமான குழப்பத்திற்கு மத்தியில் இன்று தொடங்குகிறது. 


ஐடியாஸ் ஆஃப் இந்தியா:


இது அதன் வழக்கமான சுழற்சியில் இருந்து இயற்கையால் கொண்டுவரப்பட்ட ஒரு குழப்பம். பழிவாங்கலுக்காகவும் புதுப்பித்தலுக்காகவும் துடிக்கும் சக்திகள் வரலாற்றுக்கு சவால் விடும் சமயத்தில், குழப்பமான சூழல் நிலவி வருகிறது. சமூகத்தை தொழில்நுட்பம்  ஜனநாயகப்படுத்துவதைத் தொடர்ந்து விஞ்ஞானம் சாதித்துக்கொண்டிருக்கும் காலம் இது.


ஐரோப்பாவில் ஒரு பழைய வல்லரசின் நவீன பேரரசர் என்ற பார்வை கொண்ட மனிதரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு போரை எண்ணி தயக்கம் கொண்ட இளைஞர்கள் கொடும் நிகழ்வை நோக்கி அணிவகுத்துச் செல்கிறார்கள். புரிந்துகொள்ள முடியாத சீனாவில், பேரழிவு தரும் தொற்றுநோயை இரும்புக்கரம் கொண்டு கையாள்வது குறித்து முணுமுணுப்புகள் வெளிப்படுகின்றன.


உலக விவகாரங்கள்:


ஈரானில், துணிச்சலான பெண்கள் அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறார்கள். வட அமெரிக்காவில், சமூக பழமைவாத சக்திகள் தாராளவாத ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன. தெற்காசியாவில் பொருளாதார ஸ்திரமின்மை எதிர்பார்ப்புகளைத் தடம்புரளச் செய்து, ஆளும் சக்திகளை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. 


நம் நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை பிரச்னை, அதிகரிக்கும் விலைவாசி உயர்வு பிரச்சனை தொடர் கிளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. நாடு கடந்து எல்லை கடந்து சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்துள்ளனர் அகதிகள். இந்த குழப்பத்தின் மையமாக அதிகாரத்தின் அச்சில் மாற்றம், பழைய கூட்டணிகளை கேள்விக்குள்ளாக்குவது உள்ளது.


புதிய இந்தியா:


உலக வரலாற்றில் இன்னொரு பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் இந்த தருணத்தில் இந்தியா எங்கே நிற்கிறது? ஒன்பது மாநிலங்களுக்கான தேர்தல்கள், புத்துயிர் பெற்ற தென்னிந்தியா, புத்துயிர் பெற்ற அரசியல் எதிர்ப்பு மற்றும் துறைகளில் வழிநடத்த பொறுமையற்ற ஒரு புதிய தலைமுறையுடன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆண்டாக 2023 உள்ளது.


ஏபிபி நெட்வொர்க் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சிமாநாட்டின் இரண்டாவது பதிப்பில், "புதிய இந்தியாவைக் கொண்டாடுகிறோம்: உள்ளார்ந்து பார்த்து, அணுகுகிறோம்" என்ற தலைப்பில் தலைவர்கள், தொழில் அதிபர்கள், கலாசார தூதர்கள், அரசியல் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.