18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், COWIN-இல் தடுப்பூசி முன்பதிவை எப்படி செய்வது?


1. உங்கள் ப்ரவுசரின், Address பார் மீது, URL: selfregistration.cowin.gov.in என்பதை எண்டர் செய்யவும்.


2. “மொபைல் எண்ணை உள்ளிடுக” என்று கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில், உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP பட்டனைக் க்ளிக் செய்யவும்.


3. 6 இலக்கத்தில் ஒரு OTP எண்ணை உங்கள் மொபைல் மூலம் பெறுவீர்கள்.


4. இப்போது CoWIN போர்ட்டலில், OTP சரிபார்ப்புத் திரைக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.


5. உங்களுக்கு கிடைத்த 6 இலக்க OTP எண்ணை அதில் உள்ளிட்டு, சரிபார்க்கவும் என்னும் பட்டனை அழுத்தவும்.


6. OTP சரிபார்க்கப்பட்டதும், வரவேற்புத் திரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.


7. உங்கள் மொபைல் என்ணை அதில் பதிந்ததும், அதே மொபைல் எண் மூலமாக, மூன்று நபர்களுக்கான முன் அனுமதிக்கு நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம்.


8. ’பயனாளரை பதிவுசெய்க’ என்னும் பட்டன் மீது க்ளிக் செய்யவும். இது, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யவும் என்னும் திரைக்கு உங்களை அழைத்துச்செல்லும்.


9. இந்தத் திரையில், ட்ராப் டவுன் மெனுவில் இருந்து நீங்கள் பதிவுசெய்ய விரும்பும் ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டையைத் தேர்ந்தெடுக்கவும்.


10. ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், பென்ஷன் பாஸ்புக், என்.பி.ஆர் ஸ்மார்ட்கார்டு அல்லது உங்கள் வாக்காளர் அடையாளம் என ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.


11. ட்ராப் டவுன் மெனுவில் இருந்து அடையாள அட்டை வகை ஒன்றைத் தேர்வுசெய்த பிறகு, கீழிருக்கும் பாக்ஸில் அடையாள எண்ணை உள்ளிடவும்.


12. எடுத்துக்காட்டாக, முன்பதிவுக்காக பான் கார்டை அடையாள அட்டையாக தேர்வு செய்திருந்தால், இந்தப் ஃபார்மில் பான் கார்டுக்கான எண் உள்ளிடப்பட வேண்டும்.


13. இப்போது உங்கள் பெயர், பாலினம், பிறந்த வருடம் ஆகியவற்றை, உங்களின் அடையாள அட்டையில் உள்ளதைப்போலவே உள்ளிடவும்


14. உங்களின் பிறந்த வருடத்தை உள்ளிட்டபின்பு, நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்டவராக காட்டினால், பயனாளருக்கான முன்பதிவை உறுதிப்படுத்துவதற்கு பதிவு செய் என்னும் பட்டனை அழுத்தவும்.


15. வெற்றிகரமாக முன்பதிவு செய்துவீட்டீர்கள் என்னும் வாக்கியம் திரையில் தோன்றும்.


16. இது உங்கள் கணக்கு விவரங்கள் அடங்கிய டேஷ்போர்டுக்கு அழைத்துச்செல்லும். அங்கு நீங்கள் பயனாளராகச் சேர்க்கப்படுவீர்கள்.


17. கூடுதலான பயனாளர்களைச் சேர்ப்பதற்கு, திரையில் தோன்றும் பயனாளரைச் சேர்க்கவும் என்னும் பட்டனைக் க்ளிக் செய்யவும்.


18. மேலும் புதிய பயனாளரின் விவரங்கள் மற்றும் அடையாள எண்ணைச் சேர்த்து, அதே முறையைப் பின்பற்றி பதிவுசெய்யவும்.


19. உங்கள் விவரங்களுக்குக் கீழே, உங்கள் முதல் டோஸ் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்.


20. ஷெட்யூல் என்னும் பட்டனை அழுத்தி, இப்போது ”ஷெட்யூல் நவ்” என திரையில் தோன்றும் பொத்தான் மீது க்ளிக் செய்யவும்.


21. ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு, அந்த நபர்களின் பெயருக்கு பக்கத்தில் இருக்கும் ஷெட்யூல் பட்டன்களை அழுத்துவதன் மூலம் ஒதுக்கீடு (Allot) செய்யலாம்.


22. அதன்பிறகு திரையின் கீழ் தோன்றும், இப்போது திட்டமிடவும் என்னும் பட்டனைக் க்ளிக் செய்யவும். 


23. 2 டோஸுக்கு அதே எண்ணில் பலரைச் சேர்க்கவேண்டுமென்றால்,  தடுப்பூசியும், முதல் டோஸ் குறித்த தகவலும் அனைவருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும்.


24. இப்போது ஷெட்யூல் என்று திரையில் தோன்றும் பாப்-அப்பைக் க்ளிக் செய்ததும், தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் திரைக்கு அழைத்துச்செல்லப்படுவீர்கள்.


25. இந்தத் திரையில், உங்கள் பின் கோடை உள்ளிட்டு, தேடு என்பதைக் க்ளிக் செய்வதன் மூலம் உங்கள் அருகிலிருக்கும் தடுப்பூசி மையத்தைக் கண்டறியலாம்.


26. உங்கள் பின் கோடு பகுதியில் அமைந்துள்ள தடுப்பூசி மையங்களின் பட்டியலை அது காட்டும்.


27. மாவட்டவாரியாகவும் தடுப்பூசி மையங்களை நீங்கள் தேடலாம்.


28. இங்கு, முதலில் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


29. பிறகு, அதையொட்டியிருக்கும் ட்ராப் டவுன் மெனுவில் இருந்து மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து தேடு என்னும் பொத்தானைக் க்ளிக் செய்யவும்.


30. இப்போது, தடுப்பூசி மையங்களைப் பற்றிய தகவலுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தடுப்பூசி மையங்கள் காட்டப்படும்.


31. அதில் தடுப்பூசி மையம் அமைந்திருக்கும் பிக் கோடு, தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச வயது,


தடுப்பூசி வகை மற்றும் அதன் விலை குறித்து தெரிவிக்கப்படும். 


32. தனியார் தடுப்பூசி மையமாக இருந்தால், ஒவ்வொரு தேதியிலும் இருக்கு தடுப்பூசி இருப்பு குறித்து தெரிவிக்கப்படும்.


33. நீங்கள் விரும்பும் தேதியில், தடுப்பூசி வகையுடன் கூடிய தடுப்பூசி மையத்தைக் கண்டறிந்ததும்,


34. அந்த தடுப்பூசி மையத்தில் காட்டப்படும் இருப்பில் உள்ள தடுப்பூசி இருக்கைகள் (options)-ஐ அழுத்தித் தேர்வு செய்யலாம்.


35. இது நேரத்தின் ஸ்லாட்டைத் தேர்ந்தெடுக்கும் இடத்துக்கு கொண்டு செல்லும். இதன்மூலம் உங்களுக்கு வசதியான நேரத்தில் தடுப்பூசியைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கலாம்.


36. நேரத்தின் ஸ்லாட்டைத் தேர்தெடுத்ததும், உறுதிப்படுத்தும் பட்டனைக் க்ளிக் செய்யவும்.



உங்கள் தடுப்பூசி முன்பதிவு வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்டது. உங்களால் இப்போது முன்பதிவு தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதைத் திரையில் பார்க்கமுடியும். முன்பதிவு ஸ்லிப்பைப் பதிவிறக்கம் செய்ய விரும்பினால், பதிவிறக்கு என்னும் பொத்தானைக் க்ளிக்செய்து உங்கள் கம்யூட்டரில் சேமித்துக்கொள்ளவும். தடுப்பூசி முன்பதிவின் திட்டமிடல் நேரத்தை நீங்கள் மாற்ற நினைத்தால், பயனாளர் பெயருக்கு அடுத்ததாக இருக்கும் பட்டனின் மறுதிட்டமிடல் பட்டனை அழுத்தி, முன்பதிவுக்கான நேரத்தையும், தேதியையும் மாற்றவும். நீங்கள் ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்திருந்தால், உங்களின் இரண்டாம் டோஸுக்கான தகவல், கணக்கு விவரங்கள் அடங்கிய டேஷ்போர்டில் பெயருக்குப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் தடுப்பூசிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய, உங்கள் விவரங்களுக்குப் பக்கத்தில் இருக்கும்  சான்றிதழ் பட்டனைக் க்ளிக் செய்யவும். ஒரே ஒரு டோஸ் தடுப்பூசியை மட்டும் நீங்கள் எடுத்திருந்தால், உங்களால் ப்ரொவிஷனல் தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கமுடியும். இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டிருந்தால், முழு தடுப்பூசிச் சான்றிதழையும் பதிவிறக்கமுடியும்.