ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் இந்திய ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் இணைந்து நடத்திய கூட்டு முயற்சி காரணமாக கடந்த ஜூன் 3 ஆம் தேதி பெங்களூரு ஒகாலிபுரத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாதி இனத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிப் ஹுசைன் என அடையாளம் காணப்பட்ட கைது செய்யப்பட்ட நபர், தீவிரவாத அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்ததாகவும் இராணுவத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து மூத்த புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தலிப் ஹுசைன் கைது செய்யப்பட்டதற்கு பின்புதான் பெங்களூர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். கடந்த இரண்டு வருடங்களாக ஹுசைன் பெங்களூர் நகரில் வசித்து வந்ததாகவும், நகரத்தில் வேலை வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அவரை பற்றிய விவரங்களைப் பெற முயற்சிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து, ஹுசைன் கைது செய்யப்பட்டதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “இது ஒரு தொடர் செயல்முறை. மக்கள் நடமாட்டத்தை காவல்துறையினர் கண்காணித்து உதவி செய்துள்ளது. இதற்கு முன்னதாக பட்கல் நகரிலும் இது போன்ற ஒரு கைது சம்பவம் நடந்தது.  தற்போது ஜம்மு காஷ்மீர் போலீசார் பெங்களூருவில் கைது செய்துள்ளனர். நாங்களும் இதற்கு உதவி செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 


யார் இந்த தலிப் ஹுசைன்..? 


ஜம்மு காஷ்மீரில் உள்ள நாகசெனி தெஹ்சில் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசைன், 2016 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் கேடர் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாகவும், காஷ்மீரில் பயங்கரவாத சதித்திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


அவர் 2016 இல் ஹிஸ்புல் முஜாஹிதீனில் சேர்ந்தார். பாதுகாப்புப் படையினரின் ஹிட் லிஸ்டில் இருந்த பிறகும் அதிக நாட்கள் உயிர் பிழைத்த ஒரே பயங்கரவாதி தலிப் மட்டுமே. தாலிப் குர்ஜார் இங்குள்ள குர்ஜார் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், அவர்கள் இங்குள்ள மலைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள்.


இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். கிஷ்த்வாரில் உள்ள மர்வா மற்றும் தச்சனின் மேற்பகுதியில், அவர் பலமுறை ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதைக் கண்டுள்ளார். அவரை முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் பலமுறை காவல்துறையினரிடம் உதவி கேட்டும் பலனில்லை.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண