ஹிமாச்சலப் பிரதேசத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கடந்த 2 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


வடமாநிலங்களில் இதுவரை குறைந்தது 28 பேர் கனமழை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்துள்ளன. 


டேஞ்சர் கோட்டை கடந்த யமுனா நதியின் நீர்வரத்து: 






முடங்கிய ஹிமாச்சலப் பிரதேசம்: 


ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த திடீர் வெள்ளத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உட்பட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவசர அவசரமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டும் வருகின்றனர். 






அடுத்த 24 மணி நேரத்திற்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மக்களுக்கு தெரிவித்ததாவது, “மிக கனமழை பெய்ய சாத்தியக்கூறுகள் இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். 






பொதுமக்களை மீட்க மூன்று ஹெல்ப்லைன்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி - 1100, 1070, 1077 என்ற எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ நான் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார். 






இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல மாநிலங்களில் உள்ள சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது.