இமாச்சலப் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார்  என்ற தகவல் பரவிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 


இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் வகையிலான அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று அங்கு ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தற்போது போதிய அளவு ஆதரவு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையை பொறுத்தவரை மொத்தம் 68 உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்களும், பாஜகவின் 25 உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் கட்சி மாறி வாக்களித்தனர். இதனால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். 


இந்த நிலையில், இன்று அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுக்விந்தர் சிங் சுகு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், இதற்கு முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தனது தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என சுக்விந்தர் சிங் சுகு உறுதியாக தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: MP Kanimozhi Karunanidhi: ’எங்கள் பெயரை சொல்ல மனமில்லை; அவர்களுக்குத் தெரிந்த நாகரீகம் அவ்வளவுதான் - கனிமொழி எம்.பி.,