ஹிமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் அறையில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தவிர ஒரு காங்கிரஸ் அமைச்சரும் ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஹிமாச்சல் அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது. 






பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெயராம் தாக்கூர், விபின் சிங் பார்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரி, தீப் ராஜ், பூரன் தாக்கூர், திலீப் தாக்குர் மற்றும் இந்தர் சிங் காந்தி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.






மேலும், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரும் ராஜினாமா செய்துள்ளார். இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நேற்று கட்சி மாறி வாக்களித்த சூழலில், ராஜ்யசபை சீட் ஒன்று பா.ஜ.க.வின் வசம் சென்றது. இதனால் ஹிமாச்சல அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.