New Road Safety Rules: இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோருக்கு அவ்வப்போது புதிய சாலை விதிகளை மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அறிவித்து வருகிறது. அந்தவகையில் தற்போது சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று புதிய கட்டுப்பாடும் விதிகப்பட்டுள்ளது.  மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த விதிகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய விதிகள் மோட்டர் வாகன சட்டம் 1989-ன் 138ஆவது விதியை மாற்றி அமைக்கும் வகையில் அமைந்துள்ளது. 






மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது குழந்தைகள் கீழே விழாமல் இருக்க பாதுகாப்பு சாதனம் ஒன்றையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சாதனம் 30 கிலோ எடை வரை தாங்கும் அளவில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு ஓட்டநர் உரிமம் ரத்து உள்ளிட்ட தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்தும் வெளியாகிய ஒரு ஆண்டிற்கு பிறகு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. அதன்படி இந்த விதிகள் அனைத்தும் வரும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: இளம் எம்.எல்.ஏவை கரம் பிடிக்கபோகும் திருவனந்தபுரத்தின் இளம் மேயர் ! விரைவில் டும் டும் டும்...!