Manipur Violence: மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பெண்களை நிர்வாணமாக நடக்கவிட்ட கொடூரம்


மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைள மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. மேலும், அவர்களை அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் மணிப்பூர்  தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காங்கபோக்பி மாவட்டத்தில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. 


இதுகுறித்து பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ITLF என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் குகி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்ததது. ஆனால் இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல்  தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


கண்டனம்


”மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. மனித குலத்தின் நல்ல குணங்களை வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு அழிக்கிறது. நமது மனசாட்சி எங்கே போனது?  மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






”மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைந்துவிட்டது. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது” என்றார் பிரியங்கா காந்தி.






மேலும், இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ”மணிப்பூரில் 2 பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து முதல்வர் பீரன் சிங்கிடம் பேசி உள்ளேன். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முயற்சி ஒருபோது கைவிடப்படாது” என்றார்.