தமிழ்நாடு:



  • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது யார்? குழப்பத்தில் அதிமுக; திணறும் எதிர்க்கட்சிகள்

  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிப்பு - முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து 

  • ஈரோடு கிழக்கில் நாங்கள் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவது உறுதி என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் அமைக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யோசனை.

  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் போட்டியிட காங்கிரஸ் தலைமையே முடிவெடுத்ததாக அமைச்சர் முத்துசாமி தகவல்.

  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுவில் விவாதிக்க வேண்டியுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • தீர்ப்புகள் அனைத்தும் இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • "மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மட்டும் தான் தாங்கள் பயின்ற கல்லூரியை பார்க்க முடியாமலேயே பட்டம் பெற்று வெளியேறுவார்கள்" - சு.வெங்கடேசன்

  • மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை


இந்தியா:



  • அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து தான் இந்திய அரசாங்கம் தொடங்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  • அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயரிடப்படாமல் இருந்த 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்.

  • மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பகத் சிங் கோஷியாரி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள்.

  • சட்டசபையில் உரை; அரசு தயாரித்த உரையை வார்த்தை விடாமல் வாசித்த கேரள ஆளுநர்

  • கோவா மாநில உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாதுகாப்பு நிலவரத்தை ஆராய்ந்தார்.

  • ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் ,தச்சூர் வரை 126 கி.மீ ஆறு வழிச்சாலைக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

  • மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கென தனி தேர்தல் வாக்குறுதிகள் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.


உலகம்:



  • சவுதி அரேபியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் தற்போது விசா இன்றி பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபை தங்களின் பணி ஆட்களில் 6 சதவிகிதம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

  • கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்றி இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  • நேபாளத்தில் பொகாரா எனும் இடத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த ஐந்து இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

  • 115 ஆண்டுகள் 322 நாள்கள் வாழ்ந்து வரும் மரியா பிரானியாஸ் மோரேரா என்ற பெண்மணி உலகின் வயதான பெண்மணி எனும் புதிய சாதனையை படைத்துள்ளார். 


விளையாட்டு:



  • ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர்:தமிழ்நாடு-சவுராஷ்டிரா மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.

  • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

  • மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மேற்பார்வை கமிட்டியின் தலைவராக மேரிகோம் நியமனம்

  • இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 ஆண்கள் அணியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்