HDFC: ”நான் அந்த சாதி, என் கூட மோதாத” வாடிக்கையாளருக்கு மிரட்டல், வங்கியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
HDFC Caste Issue: எச்டிஎஃப்சி வங்கி ஊழியர் வாடிக்கையாளரை சாதி பெயரை பயன்படுத்தி மிரட்டும் வீடியோ, இணையத்தில் வைரலாகியுள்ளது.

HDFC Caste Issue: எச்டிஎஃப்சி வங்கி ஊழியரின் பேச்சிற்கு பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
எச்டிஎஃப்சி வங்கி ஊழியருக்கு குவியும் கண்டனங்கள்:
எச்டிஎஃப்சி வங்கி பெண் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளருடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு வங்கி கிளையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இணையத்தில் வைரலாகியுள்ள அந்த வீடியோவில், ஆஸ்தா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் ஊழியர், வாடிக்கையாளரை ஆவேசமாக திட்டி தீர்த்துள்ளார். மேலும், வகிக்கும் பதவிக்கு ஏற்ற பக்குவம் மற்றும் பொறுப்பு ஏதும் இன்றி, சாதி ரீதியான வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
”நான் தாகூர்.. என்கூட மோதாதே..”
நகரின் பன்கி பகுதியில் உள்ள வங்கிக் கிளையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. லேப்டாப்பை கையில் எடுத்து ஆண் வாடிக்கையாளரை நோக்கி மிரட்டும் வகையில் பேசிய அந்த ஊழியர், “நான் தாக்கூர், என்னுடன் மோதாதே” என பேசியுள்ளார். வங்கி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரை நோக்கி சாதி ரீதியான வார்த்தகைளை பயன்படுத்தியது தான் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆஸ்தா சிங் எனும் அந்த ஊழியர் தொழில்முறை கொள்கைகளை முற்றிலுமாக மீறியுள்ளதோடு, வாடிக்கையாளரை அவமதித்துள்ளதாகவும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். அந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். சாதி ஆணவம் பிடித்த இத்தகைய நபர்களை, சேவை துறைகளில் பணியமர்த்தவே கூடாது எனவும் சாடி வருகின்றனர்.
"Thakur hoon main, 🤡
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) February 8, 2026
bakchodi mat karna mere se." 👹👹
Astha Singh, an HDFC employee, flaunted her caste on the bank premises and tried to beat a customer without any shame.
This 'Manu Ki Naatin' has only merit of hate. HDFC must kick out this casteist clown now. pic.twitter.com/MVFND1m1y4
கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் ஆவேசமாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “சூப்பர் @HDFC_Bank @HDFCBank_Cares . வாடிக்கையாளர்களை நீங்கள் எப்படி கவனித்துக்கொள்கிறீர்கள் என்பது தெரிகிறது, அது மிகவும் அருமை” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர், “@HDFCBank_Cares உங்கள் ஊழியரின் செயல்பாட்டை கவனியுங்கள்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில்,”அந்த பெண் உழியர் பணியில் இருந்து நீக்கப்படுவதோடு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

HDFC வங்கி நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் இதுவரை வெளியிடவில்லை. இந்த சம்பவம் பணியிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாடிக்கையாளர்களை எப்படி கையாள வேண்டும் மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான ஆணவம் பரவுவது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
























