இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கி, தனது ATM பரிவர்த்தனை விதிகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், சாமானிய வாடிக்கையாளர்கள் முதல் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடும்.

Continues below advertisement

இலவச பரிவர்த்தனை வரம்புகள், கூடுதல் கட்டணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதால், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தேவையில்லாத கட்டணங்கள் பிடிக்கப்படாமல் இருக்க இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வாருங்கள் அவற்றை விரிவாக பார்க்கலாம். ஏப்ரல் 1, 2026 முதல் UPI மூலம் ATM-களில் பணம் எடுக்கும் முறை, மாதந்தோறும் வழங்கப்படும் இலவச ATM பரிவர்த்தனை வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.

Continues below advertisement

இதற்கு முன்னதாக UPI மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட முறையில் இலவசமாக இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்காது என அறிவித்துள்ளது. இதுவும் DEPIT கார்டு மூலம் பணம் எடுப்பதை போன்றே கணக்கில் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஆக இனி உங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகள் முடிவடையும் பட்சத்தில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம். தற்போதைய நிலையில் சேமிப்பு மற்றும் சம்பள கணக்குகள் மூலம் ஒருவருக்கு 5 முறை இலவச பரிவர்த்தனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் பணம் எடுத்தல் மற்றும் நிதி சாரா பரிவர்த்தனைகளும் அடங்கும்.

5 பரிவர்த்தனைகளுக்கு மேல் சென்றால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் கட்டணம் மற்றும் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். இதர வங்கி ATM-களில், மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவச வரம்பு உண்டு. அதற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு 23 ரூபாய் கட்டணம் பொருந்தும். தற்போது UPI மூலம் பணம் எடுப்பதும், இந்த விதியின் கீழ் வருகிறது. ஆக கவனமுடன் இருப்பது நல்லது. இருப்பினும் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் பாதிப்பு இல்லை எனலாம். அதாவது சில குறிப்பிட்ட நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு HDFC ATM-களில் வரம்பற்ற இலவச பரிவர்த்தனைகள் தொடரும்.

குறிப்பாக HDFC பிஷ் லைட் பிளஸ், பிஷ் ப்ரோ பிளஸ், பிஷ் அல்ட்ரா பிளஸ், பிஷ் எலைட் பிளஸ், பிளெக்ஸி பிளஸ், ஆக்டிவ், பிளஸ், ஏசென்ட், மேக்ஸ் அட்வான்டேஜ், மேக்ஸ், புரபெஷனல் எகாம், அபெக்ஸ், அல்டிமா, மெர்ச்சன்ட் அட்வான்டேஜ் பிளஸ், சுப்ரீம், ஸ்டார்ட் அப், ஸ்மார்ட் அப் குரோத் மற்றும் ஜிகா கரன்ட் அக்கவுன்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனினும் மற்ற வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இனிமேல் G PAY, PHONE PE, PAYZPP, PAYTM போன்ற ஆப்களை பயன்படுத்தி பணம் எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.