சமீப காலமாக, கடும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, வறட்டு இருமலால் மக்கள் அவதிக்கப்பட்டு வந்தனர். எனவே, இது கொரோனாவாக இருக்குமோ என குழப்பம் நீடித்து வந்தது.


அச்சத்தை ஏற்படுத்தும் H3N2 வைரஸ்:


ஆனால், பின்னர், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் H3N2 வைரஸால் காய்ச்சல் பரவி வந்தது தெரிய வந்தது. இது, ஹாங் காங் வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது. 


இந்த நிலையில், H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. ஹரியானாவில் ஒருவரும் கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 


கர்நாடக மாநிலம் ஹாசனில் 82 வயது முதியவர் ஒருவர் H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டு நாட்டிலேயே முதன் நபராக உயிரிழந்துள்ளார் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவரின் பெயர் ஹிரே கவுடா. 


கர்நாடகா, ஹரியானாவில் உயிர் பலி:


இந்நிலையில், H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. ஹரியானாவில் ஒருவர் மற்றும் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாசனில் 82 வயது முதியவர் ஒருவர் H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டு நாட்டிலேயே முதன் நபராக உயிரிழந்துள்ளார் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 


இவரின் பெயர் ஹேர் கவுடா. இவர், பிப்ரவரி 24ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மார்ச் 1ஆம் தேதி, உயிரிழந்தார். இவர், நீரிழிவு நோயாளி என்றும், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


நாட்டிலேயே இதுவரை, H3N2 வைரஸால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி, H3N1 வைரஸால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையை காட்டிலும் H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். 


இந்தியாவில் இதுவரை H3N2 மற்றும் H1N1 தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகை வைரசுக்கும் கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளே உள்ளன. இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த புது வகை வைரஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை கிளப்பியுள்ளது.


H3N2 வைரஸின் அறிகுறிகள் என்ன?


தொடர் இருமல், காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் ஆகியவை அறிகுறிகளாக தென்படுகிறது. அதுமட்டும் இன்றி, குமட்டல், தொண்டை புண், உடல் வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் அறிகுறிகளாக தென்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் அனைத்தும் சுமார் ஒரு வாரம் நீடிப்பதாக கூறப்படுகிறது.


இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. இருமல், தும்மல் மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.