சட்டீஸ்கரைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர் அவனீஷ் ஷரன். இவர் விமானத்தில் பயணித்துள்ளார். அவருக்கு ஜன்னலோர இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.


விமான ஜன்னலோர இருக்கையில் குட்கா கறை


இந்நிலையில், உள்ளூர் பேருந்துகள், ரயில்கள், சாலை ஓரங்களில் வழக்கமாகக் காணப்படுவது போல் ஐஏஎஸ் அலுவலர் அவனீஷ் பயணித்த விமான இருக்கையின் ஓரத்திலும் குட்கா கறை இருந்துள்ளது.


இந்நிலையில், குட்கா கறையை புகைப்படம் எடுத்து தன் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள அவனீஷ் ஷரன், ”யாரோ விமானத்தில் தன் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார்” என கேலியுடனும் வருத்தத்துடனும் பதிவிட்டுள்ளார்.


 






நெட்டிசன்கள் கடும் கண்டனம்


அவனீஷ் தரனின் இந்தப் பதிவையடுத்து சமூக வலைதளத்தில் மக்கள் சுகாதாரமின்மை குறித்து கவலை தெரிவித்தும், விவாதித்தும், இவ்வாறு செய்தவரை கண்டுபிடித்து தண்டிக்குமாறும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், குட்கா, பான் பராக் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களையும் நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.


 






இந்தியாவில் புகையிலை பயன்பாடு


2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


இந்தக் கணக்கெடுப்பு 2019- 2021ஆம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் நடத்தப்பட்டது. மேலும், நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட ஒன்பது விழுக்காடு பேர் புகையிலையை உட்கொள்கிறார்கள் என்றும் இந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.


இதையும் படிங்க: UIDAI Update: ஆதார் கார்டை எப்படிதான் பயன்படுத்த வேண்டும்: குழப்பத்துக்கு தெளிவாக விளக்கம் கொடுக்கும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண