UP Marriage Clash: சோத்துல சாம்பாரா..! விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி - மணமகன் குடும்பத்தினரின் ரகளையால் நின்ற திருமணம்

UP Marriage Clash: உத்தரபிரதேசத்தில் விருந்தில் அசைவ உணவு இல்லாததால் திருமண வீட்டில் அடிதடி ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

UP Marriage Clash: உத்தரபிரதேசத்தில் விருந்தில் அசைவ உணவு இல்லாததால் எற்பட்ட மோதலால், கடைசி நேரத்தில் திருமணம் கைவிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

அசைவ உணவு இல்லாததால் திருமண விருந்து:

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகர் எனும் கிராமத்தில் தான், உணவுக்காக பெரும் மோதல் ஏற்பட்டு ஒரு திருமணமே கைவிடப்பட்டுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் சர்மா என்பவருக்கும்ம், சுஷ்மா என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அதன்படி கடந்த 11ம் தேதி மணமகன் உறவினர்களுடன் பெண்ணின் வீட்டிற்கு ஊர்வலமாக வந்துள்ளார். தொடர்ந்து, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் மாலைகளை மாற்றிக் கொண்டதும், மணமகன் குடும்பத்தினர் உணவு உண்ண சென்றுள்ளனர். அங்கு இலையில் பரிமாறப்பட்ட உணவுகளில் பன்னீர, வெஜ் ரைஸ் என மொத்தம் சைவ உணவு வகைகளாகவே இருந்துள்ளன. அசைவ உணவு எதுவும் இல்லாததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடிதடியில் முடிந்த வாக்குவாதம்:

அசைவ உணவு இல்லாதது குறித்து மணமகள் குடும்பத்தினரிடம், விருந்தில் மீன் கூட வைக்கமாட்டீர்களா என மணமகன் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஒரு சிறுமியையும் அறைந்துள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றியதில் இருதரப்பினும் ஒருவரை ஒருவர் சரமாரியாகவும்,  கண்மூடித்தனமாகவும் தாக்க தொடங்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த நாற்காலிகளையும் தூக்கி வீசி அடித்துக்கொண்டனர். இதனால் கடைசி நேரத்தில் அந்த திருமணம் கைவிடப்பட்டுள்ளது. இந்த மோதலில் 6 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் வழக்கு:  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு தரப்பினரையும் சமாதனப்படுத்தினர். அப்போது பேசிய மணமகளின் தந்தை, “மாப்பிள்ளை, அவரது தந்தை சுரேந்திர சர்மா மற்றும் பலர் அசைவ உணவு இல்லாதது குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். நான் எதிர்த்தபோது, ​​அபிஷேக் சர்மா, சுரேந்திர சர்மா, ராம்பிரவேஷ் சர்மா, ராஜ்குமார் மற்றும் தெரியாத சிலர் என் குடும்பத்தினரை கட்டையால் அடித்து உதைத்தனர். முன்னதாக எங்களிடம் திருமணத்திற்காக வரதட்சணையாக 4.5 லட்சம் பணம் பெற்றனர். 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளையும் பெற்றனர்” என தெரிவித்துள்ளார்.  இதையடுத்து, அபிஷேக் சர்மா, சுரேந்திர சர்மா, ராம்பிரவேஷ் சர்மா, ராஜ்குமார் மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement