மேலும் அறிய

LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்

LPG Cylinder Ujjwala: உஜ்வாலா திட்டத்தின் கீழ் இனி ஆண்டுக்கு 4 எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

LPG Cylinder Ujjwala: உஜ்வாலா திட்டத்தின் தொடக்கத்தின் போது 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்லப்பட்ட நிலையில், தற்போது அது படிப்படையாக 4 ஆக குறைந்துள்ளது.

இனி 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம்

மத்திய அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றான உஜ்வாலா திட்டத்தின் கீழ், இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்த திட்டத்தை தொடங்கும்போது, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு ஆண்டிற்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த மானிய ஒதுக்கீடு ஒன்பது சிலிண்டர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மேலும் 5 சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு நான்கு சிலிண்டர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்ட பயனாளர்களின் சராசரி குடும்ப நுகர்வு அளவுகளுக்கு ஏற்ப, மானிய விலையிலான சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மல் கானூஜா அறிவித்துள்ளார்.

சிலிண்டருக்கு ரூ.300 மானியம்

தூய்மையான சமையல் எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அதன் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், அரசாங்கம் 2022ம் ஆண்டின் மே மாதம், 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.200 என்ற மானியத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை ஒவ்வொரு முறை சிலிண்டர் நிரப்பும்போதும், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. 2023 அக்டோபரில், இந்த மானியம் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு ரூ.300 ஆக உயர்த்தப்பட்டதுடன், விகிதாசார அடிப்படையில் இந்தச் சலுகை 5 கிலோ சிலிண்டர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது எல்பிஜி விலை உயர்வைத் தொடர்ந்து, மானிய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது.

எகிறும் சிலிண்டர் விலை:

அமெரிக்கா -ஈரான் இடையேயான போர் காரணமாக சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் கேஸ் சிலிண்டர்கள் என அனைத்து வகையான எரிபொருட்களின் விலையும்  உயர்ந்துள்ளது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான விலை, கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 7ம் தேதி 60 ரூபாய் மற்றும் ஜுன் 7ம் தேதி 29 ரூபாய் என மொத்தம் 89 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 14.2 கிலோ எடையிலான வணிக சிலிண்டரின் விலை 957 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. இப்படி அனைத்து வகையிலான எரிபொருட்களின் விலையும் உயரும் நிலையில், மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு இருப்பது பயனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: Hyundai SUV: சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி

காங்கிரஸ் விமர்சனம்

மானிய சிலிண்டர்களுக்கான எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பான செய்தியை குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஏழை பெண்களுக்கு மோடி பரிசு. உஜ்வாலா திட்டம் பாஜகவினரின் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகறது. 2016ம் ஆண்டில் 12 சிலிண்டர்களுக்கு மானியம். கடந்த ஆண்டில் 9 சிலிண்டர்களாக குறைப்பு, இன்று வெறும் 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம். ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும் ,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது. சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான் என்று அரசு சொல்கிறது. உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் சிலிண்டரை குறைவக பயன்படுத்துகின்றனர்,  தேவை இல்லாததால் அல்ல. இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்” என பதிவிட்டுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!
ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!
வருமான வரி ரீஃபண்ட்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்தால் 7 நாட்களில் பெறலாம்!
வருமான வரி ரீஃபண்ட்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்தால் 7 நாட்களில் பெறலாம்!
IRCTC இணையதளம் மேம்பாடு: இனி நொடிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு!
IRCTC இணையதளம் மேம்பாடு: இனி நொடிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு!
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget