கேரள மாநிலத்தில் சமீப காலங்களாக கனமழை பெய்வதும், கனமழை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சகம் வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:






 


கேரள மாநிலத்தில், 2001-2021 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) கேரளாவில் கனமழை பெய்வது அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 






மேலும், கேரளாவில் புதிதாக அமைக்கப்பட உள்ள வானிலை மையங்கள் உள்ளிட்ட பல குறித்தும் இடம்பெற்றுள்ளன. 






 கேரளாவில் தானியங்கி வானிலை நிலையங்களின் இணைப்பை அதிகரிக்க இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. பி.ஐ.எஸ்-1994 தரநிலைகளின் படி கேரளாவில் 115 வானிலை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த மாநிலத்தில் 100 தானியங்கி வானிலை நிலையங்களை அமைக்க இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முடிவு செய்தது. புவி அறிவியல் அமைச்சகம் அண்மையில் 77 நிலையங்களை அமைத்ததுடன், மேலும் 23 நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர கேரளாவில் கூடுதலாக 15 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் மொத்தம் 92 நிலையங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


 




செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு...


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண