நம் சமுதாயத்தை நல்ல முறையில் மாற்றத்தை கொண்டு வர பெண் குழந்தைகள் முக்கிய பங்காற்றுகிறார்கள் என பிரதமர் மோடி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக சமூகத்தில் அவர்களின் நிலையை மேம்படுத்துவதும் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 






பிரதமர் நரேந்திர மோடி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பெண் குழந்தைகள் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என்று பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த அரசாங்கம் பெண் குழந்தைகள் கல்வி பயின்று வளர்ச்சியடைந்து சாதனைகள் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 


இது தொடர்பான அவரது எக்ஸ் பக்க பதிவில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தையின் அசைக்க முடியாத மனப்பான்மை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் வளமான திறனையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் நம் நாட்டையும் சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு பெண் குழந்தையும் கற்கவும், வளரவும், செழிக்கவும் வாய்ப்புள்ள ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நமது அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். பெண்குழந்தை பாலின விகிதத்தை அதிகரிக்கவும், பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மோடி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தனது முதன்மைத் திட்டமான 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' அறிமுகப்படுத்தியது