வாடிக்கையாளர்களுக்கு பழச்சாற்றில் சிறுநீர் கலந்து விற்றதாக ஜூஸ் கடைக்காரர் ஒருவரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது. அவரை தவிர 15 வயது சிறுவன் ஒருவரையும் காவலில் எடுத்துள்ளனர் போலீஸ் அதிகாரிகள். 


ஜூஸில் சிறுநீர் கலந்து விற்ற கடைக்காரர்:


காசியாபாத்தில் ஜூஸ் கடைக்காரர்கள் இருவரை உள்ளூர் மக்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பழச்சாற்றில் சிறுநீர் கலந்து விற்றதாக கூறி ஜூஸ் கடைக்காரர்களை அவர்கள் தாக்கியுள்ளனர்.


இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "சிறுநீரை கலந்து வாடிக்கையாளர்களுக்கு பழச்சாற்றை விற்றதாக பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்:


இதுதொடர்பாக விரிவாக பேசிய காவல் உதவி ஆணையர் அங்கூர் விஹார் பாஸ்கர் வர்மா, "குற்றம் சாட்டப்பட்டவர் அமீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு வந்து அவரது ஜூஸ் கடையில் சோதனை நடத்தி சிறுநீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனை மீட்டனர்.


 






சிறுநீர் நிரப்பப்பட்ட கேனை குறித்து உரிமையாளரிடம் விசாரித்தபோதும் அவர் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை. சிறார் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கடந்த ஆண்டும், இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. ஆன்லைனில் மில்க் ஷேக்கை ஆர்டர் செய்து சாப்பிட்ட நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதுகுறித்து அந்த நபர் கூறுகையில், “ஆர்டர் செய்த உணவைச் சாப்பிடத் தொடங்கியபோது, ​​கப்பில் ஒரு ஸ்ட்ராவை வைத்து உறிஞ்சினேன். எனக்கு வழங்கப்பட்ட கப்பில் சிறுநீர் இருந்தது என்பதை விரைவில் கண்டுபிடித்தேன்" என்றார்.


இதையும் படிக்க: Bigg Boss 8: புதுப்புது டாஸ்க்குகள்! ரசிகர்களை கவர பிக்பாஸ் போடும் ஸ்கெட்ச்! அசத்துவாரா விஜய்சேதுபதி?