கொரியன் கேமால் வந்த வினை..! 12,14,16 வயது சகோதரிகள்..9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை - நடந்தது என்ன?
Korean Game Ghaziabad Suicide: கொரியன் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மைனர் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Korean Game Ghaziabad Suicide: கொரியன் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மைனர் சகோதரிகள், 9வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளனர்.
3 சகோதரிகள் ஒரே நேரத்தில் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில் இருந்து, அதிகாலை 2.15 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மன்னித்து விடுங்கள் அப்பா என கடிதம் ஒன்றையும் அவர்கள் எழுதி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பகி (12), ப்ரச்சி (14) மற்றும் விஷிகா (16) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த சிறுமிகள், டாஸ்க் அடிப்படையிலான ஒரு கொரியன் ஆன் - லைன் கேமிற்கு அடிமையானதன் மூலமே தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுத சம்பவம்ம் அங்கிருந்தோரை மனமுடைய செய்துள்ளது.
நள்ளிரவில் அதிர்ந்த குடியிருப்பு வளாகம்..
சம்பவம் நடந்த இரவன்று, மூன்று சகோதரிகளும் பால்கனி பகுதிக்கு சென்று, கதவினை உட்புறமாக பூட்டிக்கொண்டு திறந்து ஜன்னல் வழியாக அடுத்தடுத்து ஒவோருவராக கீழே குதித்துள்ளனர். கீழே குடித்தபோது அவர்கள் எழுப்பிய அலறலும், அவர்களது உடல் கீழே விழுந்து தெறித்தபோது எழுந்த சத்தமும், பெற்றோரை மட்டுமின்றி ஒட்டுமொத்த குடியிருப்பு வளாகத்தையும் விழிக்கச் செய்துள்ளது. பெற்றோர் பால்கனி கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருவதற்குள்ளாகவே, அவர்களது குழந்தைகள் மூன்று பேருமே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தற்கொலை செய்துகொண்ட 3 பேருமே சேதன் குமார் என்பவரின் மகள்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கொரியன் ஆன்லைன் கேமால் வந்த வினை
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே பள்ளிக்குச் செல்வதை கைவிட்ட இந்த சிறுமிகள், ஆன்லைன் கொரியன் லவ் கேம் ஒன்றிற்கு மிகவும் அடிமையாகி இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பேசிய சேதன் குமார், “ஆன்லைன் கேமிற்கு அடிமையாக எனது மகள்கள் கொரிய பெயர்கலை சூட்டிக் கொண்டனர்” என தெரிவித்துள்ளார். இரண்டாவது மகளான ப்ரச்சி தான் சகோதரிகளை முன்னிறி வழிநடத்தி இந்த கேமை பழக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் தீவிரமாக மாற, செல்போன் பயன்பாட்டை பெற்றோர் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளனர். குளிப்பது, உண்பது மற்றும் பள்ளிக்குச் செல்வது என அனைத்தையும் ஒன்றாகவே செய்யும் பழக்கங்களை அவர்கள் கொண்டிருந்துள்ளனர். கொரோனா லாக்-டவுனின் போது தான் கேமின் அறிமுகம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு பழக்கம் தீவிரமடைந்து நாளடைவில் பள்ளிக்குச் செல்வதை கூட கூட்டாக கைவிட்டுள்ளனர். இந்நிலையில், மொபைல் பயன்பாட்டை பெற்றோர் கட்டுப்படுத்தியதால் தான், சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
#WATCH | Ghaziabad, Uttar Pradesh: Three minor sisters died after jumping off the 9th floor of their residential building in Ghaziabad. The incident occurred around 2 am last night under Tila Mod Police Limits in Loni area. The reason behind the incident is not yet known.… pic.twitter.com/sAQ8E8tv5J
— ANI (@ANI) February 4, 2026
சிறுமிகளின் 8 பக்க கடிதம்
சேத்தன் குமார் சகோதரிகள் இருவரை திருமணம் செய்துகொண்டு, தனது 3 மகள்களுடன் வசித்து வந்த நிலையில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறிப்பிட்ட கேம் தொடர்பான பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம், பாக்கெட் டெய்ரி ஒன்றில் 8 பக்கத்திற்கு தற்கொலை கடிதம் ஒன்றை அந்த சிறுமிகள் எழுதி வைத்துள்ளனர். அதில், ”இந்த கடிதத்தை முழுமையாக படியுங்கள், இதில் இருக்கும் அனைத்தும் உண்மை. கொரியா தான் எங்களுடைய வாழ்க்கை. கொரியா தான் எங்களுடையே மிகப்பெரிய காதல். நீங்கள் என்ன சொன்னாலும் எங்களால் கொரியாவை விட்டுக் கொடுக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளனர். படுக்கையறையின் சுவற்றில், “நான் மிகவும் தனிமையாக இருக்கிறேன்” என்பது போன்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.























