சொந்த மகனை போல் வளர்த்த மூதாட்டி.. கடித்து கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட்.. ரத்த வெள்ளத்தில் சடலம்!

சொந்த மகனை போல் நாயை வளர்த்த 90 வயது மூதாட்டியை அந்த நாயே கடித்தே குதறியுள்ளது. நாய் கடித்ததில் அந்த மூதாட்டி உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் அவரது சடலம் கிடந்துள்ளது.

Continues below advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், சொந்த மகனை போல் நாயை வளர்த்த 90 வயது மூதாட்டியை அந்த நாயே கடித்தே குதறியுள்ளது. நாய் கடித்ததில் அந்த மூதாட்டி உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் அவரது சடலம் கிடந்துள்ளது. இந்த சம்பவம் உள்ளூர்வாசிகளையும் விலங்கு பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

நாயை சொந்த மகனை போல் வளர்த்த மூதாட்டி:

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், கடந்த சில ஆண்டுகளாகவே பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பொது மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது மட்டும் இன்றி நாயை வளர்க்கும் உரிமையாளர்களுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் விகாஸ் நகர் பகுதியில் 90 வயது மூதாட்டியை, அவரது செல்லப்பிராணி ஜெர்மன் ஷெப்பர்ட் நாயே கடித்து குதறி சாகடித்துள்ளது. மோகினி தேவி என்ற அந்த வயதான பெண், அந்த நாயை தனது சொந்தக் குழந்தையைப் போல வளர்த்து வந்துள்ளார். ஆனால், அந்த நாய் திடீரென ஆக்ரோஷமாகி அவரைத் தாக்கியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிரை விட்டுள்ளார் மோகினி தேவி.

தனது மருமகள் கிரண் மற்றும் பேரன் தீர் பிரசாந்த் திரிவேதியுடன் மோகினி தேவி தங்கியிருந்தார். ​​கிரணும் திரிவேதியும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாய் சத்தமாக குரைக்கும் சத்தம் கேட்டு மோகினி தேவி வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். நாய்க்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என பயந்து வெளியே வந்த பார்த்த அவர் மீது நாய் பாய்ந்துள்ளது.

கடைசியில் நடந்த சோகம்:

இந்தக் கொடூரமான தாக்குதலில் அந்தப் பெண் உயிரிழந்தார். அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த செல்லப்பிராணியால் அவர் கொடூரமாக கடிபட்டு உயிரிழந்தார். முதலில் அந்த நாய் வெளியாட்களைப் பார்த்து குரைப்பதாக குடும்பத்தினர் நினைத்தனர்.

ஆனால், அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்தபோது, ​​மோகினி தேவி இறந்து கிடப்பதைக் கண்டனர். அவரது முகம், வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உதவிக்கு அழைக்கப்பட்டனர். கொடூரமான நாயைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு குழு வந்தது. நாய் ஏன் திடீரென தாக்கியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Continues below advertisement