G20 Summit 2023 LIVE: டெல்லி ஜி20 உச்சி மாநாட்டின் தீர்மானம் ஒருமனதாக ஏற்பு
G20 Summit 2023 LIVE Updates Tamil: டெல்லி முழுவதும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், இன்று முதல் பொதுமக்களுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் ஜி20 மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நாடு 21வது நாடாக டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் இணைந்துள்ளது.
மொராக்கோ நாட்டில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜி20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஒடிசாவின் புகழ் பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படியான அரங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் பிரதமர் மோடி.
ஜி20 மாநாட்டையொட்டி நடக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்க டெல்லி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
’உலக நாடுகள் ஒரே குடும்பம்' என்ற கருப்பொருளுடன் டெல்லியில் சற்று நேரத்தில் ஜி20 மாநாடு தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் ஜி20 மாநாட்டின் முதல் அமர்வில் காலநிலை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல் அமர்வு முடிந்தவுடன் உலகத் தலைவர்களுக்கு மாநாடு நடக்கும் மண்டபத்தில் பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்.
வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத், எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்சிசி, மொரிசியஸ் பிரதமர் பிரவீன் குமார், சிங்கப்பூர் பிரதமர் லீ உசேன் லூங் , ஸ்பெயின் துணை அதிபர் ஆகியோர் மாநாடு நடக்கும் மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் ஒவ்வொருவரையும் பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி வரவேற்று வருகிறார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் செய்யப்பட்டுள்ள ஜி 20 மாநாடு ஏற்பாடுகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்பதை ஜி20 மாநாடுக்கான கருப்பொருள். நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய, மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான வரைபடமும் அதுவே. எனவே, ஜி20 மாநாட்டில் பங்கேற்பவர்கள் இந்த கருப்பொருளை நனவாக்கும் முயற்சிகளில் வெற்ற பெற வாழ்த்துகள் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் என்எஸ்ஏ அஜித் தோவல் வரவேற்றனர்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜி-20 மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டிற்காக டெல்லி வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வரவேற்றுள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்டபத்தில் கண் கவர் வண்ணமயமான நீரூற்றுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தான் தங்க உள்ள ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் டெல்லி வந்தடைந்தார்.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "அன்பான வரவேற்புக்காக இந்தியாவுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதன் மூலம் தொடங்குகிறேன். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது, உலகளாவிய தெற்கின் சார்பாக இந்தியா செயல்பட வேண்டும் என்ற தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு ஏற்ப நமது உலகிற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
டெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜி20 பிரதிநிதிகளை வரவேற்க, தேசிய நவீன கலைக்கூடத்தின் (என்ஜிஎம்ஏ) வளாகம் முழுவதும் 800 வண்ணமயமான காத்தாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
"ஜி20 உச்சிமாநாடு, இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளது. சரியான நேரத்தில் இதை நடத்துவதற்கு சரியான நாடு இந்தியா. அடுத்த இரண்டு நாள்களில் சிறந்த முறையில் விவாதித்து, சிறந்த முடிவுகளை எடுப்போம் என நினைக்கிறேன்" என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
"செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில், டெல்லியின் பாரத் மண்டபத்தில் 18ஆவது ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. இந்தியா நடத்தும் முதல் ஜி20 உச்சி மாநாடு இதுவாகும். அடுத்த இரண்டு நாட்களில் உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன். மனிதத்தை மையப்படுத்திய, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் புதிய பாதையை உருவாக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாளை உச்சி மாநாடு தொடங்க உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, "தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். குறிப்பாக, டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
இந்த சூழலில், ஊடக மையத்தில் சில கண்காட்சிகளை நடத்துவோம். ஃபின்டெக் துறையில் இன்னும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வராத தொழில்நுட்பங்களை ரிசர்வ் வங்கி மையத்தில் காட்சிப்படுத்துவோம்" என்றார்.
இந்தியாவுக்கு வர உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சீன பிரதமர் லீ கியாங்கையும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி. கே. சிங், வரவேற்க உள்ளார்.
திபெத்தில் நடந்து வரும் சீன ஆக்கிரமிப்பு பற்றி டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரி. நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்திய அகதிகள் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே வரவேற்றார்.
நாளை உச்சி மாநாடு தொடங்க உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி20 உச்சி மாநாட்டின் இந்திய பிரதிநிதி அமிதாப் காந்த், "இந்தியாவின் தலைமை பதவி மற்றும் தலைவர்களின் பிரகடனம் ஆகியவை வரும் ஆண்டுகளில் உலகளாவிய தெற்கு மற்றும் வளரும் நாடுகளின் குரலாக இருக்கும்" என்றார்.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தியா வந்தடைந்தார்.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கையும் அவரது மனைவி அக்சதா மூர்த்தியையும் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே வரவேற்றார்.
Background
ஜி20 உச்சிமாநாடு(G20 Summit):
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, அந்த அமைப்பின் உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், இன்று முதல் பொதுமக்களுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
பங்கேற்கும் தலைவர்கள்(G20 Summit 2023 Attendees):
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற்கும், உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அதேநேரம், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளனர்.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
- இங்கிலாந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
- ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா
- ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்
- தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல்
- ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்
- தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா
- துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன்
- அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்
- நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு
- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
ஜி20 மாநாட்டை புறக்கணித்த தலைவர்கள்(G20 Summit 2023 Boycott):
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை புறக்கணிக்கும் மற்றும் பங்கேற்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நாடுகளின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் உச்சி மாநாட்டை புறக்கணித்து இருப்பது பேசுபொருளாகியுள்ளது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங்
- ரஷ்ய அதிபர் விளாடிமி புதின்
பலத்த பாதுகாப்பு:
மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்கள் தங்க உள்ள நட்சத்திர விடுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுதிகள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. அந்த விடுதிகளின் நுழைவு வாயில்கள் முன் உள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன்புற ரோடும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -