மூன்று முறை, அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக பணியாற்றியுள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் பிரதமராக இருந்த போது அவரின் தனித்துவமான செயல்பாட்டிற்காக மதிக்கப்பட்டார். மேலும் அவர் பிரதமராக இருந்த காலத்தில் பல விஷயங்களை மிகவும் துணிச்சலாக எதிர்கொண்டார்.


முன்னாள் பிரதமர் வாஜ்பாய்:


அடல் பிஹாரி வாஜ்பாய், தனிப்பட்ட முறையில் இல்லாமல், முடிவெடுக்கும் திறன், பேச்சுத்திறன், உள்ளடக்கிய கொள்கைகள் மற்றும் அவரது வாதங்களின் வலிமை ஆகியவற்றால் தேசத்தின் தனித்துவமான பிரதமராகவும் தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டார்.


அடல் பிஹாரி வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு குவாலியரில் பிறந்தார். பல ஆண்டுகள் பாஜகவின் முகமாக இருந்தார் மற்றும் முழு காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் இவரே ஆவார். மே 16, 1996 முதல் ஜூன் 1, 1996 வரையிலும், மீண்டும் 19 மார்ச் 1998 முதல் 22 மே 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் பணியாற்றினார். 1977 முதல் 1979 வரை, பிரதமர் மொராஜி தேசாய் அமைச்சரவையில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். 






பிரதமர், குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி:


அவரது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அரசியல் கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். 






பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் அடையாளம் அடல் பிஹாரி வாஜ்பாயைப் பாராட்டி, வாஜ்பாயின் தலைமையில் இந்தியா பெரிதும் பயனடைந்ததாகக் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். மேலும் முன்னாள் தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியாவின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், 21 ஆம் நூற்றாண்டில் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைவதற்கும் அவர் முக்கியப் பங்காற்றினார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.