இந்த ஆண்டு தொடக்கம் முதலே இஸ்ரோ தரப்பில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் மற்றும் FCPS செல்ல விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.


அடுத்த மாதம் ஜி.எஸ்.எல்.வி:


பூமியிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் விண்ணில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்யும் செல்லில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதால் தண்ணீர் மற்றும் வெப்பம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து 6 ஆம் தேதி சூரியனை ஆராயும் நோக்கில் விண்ணிற்கு செலுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக எல்1 எனப்படும் லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. இப்படி இந்த ஆண்டு தொடக்கம் முதலே அடுத்தடுத்து சாதனை இஸ்ரோ படைத்து வருகிறது. அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.


இன்சாட் 3டிஎஸ்:


இதில் முக்கியமாக இன்சாட் 3டிஎஸ் என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது. அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் ஜி.எஸ்.எல்.வி எப்14  ராக்கெட் திரவ உந்துசக்தியை பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும்.  இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தற்போது ராக்கெட்டில் செயற்கைக்கோள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகல் தெரிவித்துள்ளனர். இந்திய வானிலை அமைப்புக்கு (ஐ.எம்.டி.) சொந்தமானது 'இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள். காலநிலை கண்காணிப்பு செயற்கைகோள்களின் தொடரின் ஒரு பகுதியாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதுடன் மற்றும் உந்துவிசை அமைப்பு ஒத்துழைப்பு ஆகிய அர்ப்பணிக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோள்களை உள்ளடக்கியது.


இன்சாட் 3 டி மற்றும் இன்சாட் 3 டிஎஸ் ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டு  செயல்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இன்சாட் 3டிஎஸ் விண்னில் செலுத்தப்பட உள்ளது.


கடந்த மே மாதம் 29 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி எப்12 ராக்கெட் மூலம் 2, 232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ் 1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 8 மாதங்களுக்கு பின் மீண்டும் பிப்ரவரி மாதம்  முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரையோஜெனிக் திரவ உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் போல் சுலபமாக இல்லாமல் சற்று சிக்கலாக இருந்தலும் இது அதிக எடையை சுமந்து செல்லும்.