பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கி பெண் உயிரிழக்கும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்னெர்கட்டா சாலை பெங்களூரு ஐஐஎம் அருகே உள்ள அஷ்ரித் ஆஸ்பியர் குடியிருப்பில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். நான்கு மாடி குடியிருப்பின் பால்கனியில் ஒரு பெண் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் ஒருவர் பெண், இன்னொருவரின் அடையாளத்தை கண்டறிய முடியவில்லை என்றும், சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கு காரணம் எனவும் அதிகாரிகள் கூறினார்கள்.
இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், “மாலை 4.41 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. எங்களுக்கு அழைப்பு வந்த பிறகு, அந்த இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம் அனுப்பப்பட்டது. தீ தீவிரமடைவதாக அவர்கள் தெரிவித்தவுடன், தீயை அணைக்க மற்ற இரண்டு தீயணைப்பு வாகனங்களை நாங்கள் அனுப்பி வைத்தோம். தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 75 வீடுகளில், நான்கு முற்றிலும் சேதமடைந்துள்ளன. கட்டிடத்திற்கு மேலும் சேதங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தீயை அணைக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது” என்று கூறினார்.
CBSE on Covid19: பெற்றோரை இழந்த 10,12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் இல்லை! - சி.பி.எஸ்.இ.