கேரளாவில் சிக்கிய உலகின் அதிநவீன போர் விமானம்! ஏன் இவ்வளவு தாமதம்? சுவாரஸ்யமான காரணம் இதோ!
ஒருமுறை வந்துவிட்டால், கிளம்பி செல்வதற்கு மனமில்லாத அளவுக்கு இயற்கை வளம் நிறைந்தது கேரளா என விளம்பரப்படுத்தி இருந்தது கேரள அரசு துறை நிர்வாகம்.
கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை போர் விமானமான F-35B பழுதுபார்க்க முடியாத நிலையில் இருந்ததால் அந்த விமானத்தின் பாகங்களை தனித்தனியாக பிரித்து இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது. கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் அந்த போர் விமானத்தை தனித்தனியாக பிரித்து, ராணுவ சரக்கு விமானம் மூலமாக இங்கிலாந்துக்கு மீண்டும் கொண்டு சென்று பழுது நீக்க திட்டமிடப்பட்டது. இந்த போர் விமானத்தை பழுது நீக்குவதற்காக ஜூலை 5ம் தேதி 40 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்து பொறியாளர்கள் குழு சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தனர்.
பழுது நீக்குவதற்காக பிரிக்கப்பட்ட F-35B போர்விமானத்தை கொண்டு செல்ல சி-17 குளோப்மாஸ்டர் III விமானம் பயன்படுத்தப்பட்டது. அப்படி பயன்படுத்தப்பட்ட குளோப்மாஸ்டர் என்பது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஆற்றல் வாய்ந்த கனரக சரக்கு விமானமாகும். இது சுமார் 77 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டது. ஆனால், F-35B விமானம் 14 மீட்டர் நீளம் கொண்டது, அதன் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் நீளம் கொண்டவை. எனவே இந்த போர் விமானத்தை முழுமையாக குளோப்மாஸ்டரில் ஏற்ற முடியாது. இதனால் F-35B விமானத்தின் இறக்கைகளை பிரித்து குளோப்மாஸ்டர் மூலமாக கொண்டுசென்றனர்.
இந்த நிலையில் விமானம் சரி செய்யப்பட்டு மீண்டும் கேரளாவிலிருந்து திரும்பியது. ஆனால் இந்த விமானம் தரையிறங்கியதிலிருந்து தற்போது திரும்பி செல்வது வரையில், கேரள அரசு துறை நிர்வாகத்தின் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இந்த சூழலில் உலகின் அதிநவீன போர் விமானம் என அறியப்படும் இந்த விமானம் பல வாரங்களாக கேரளாவை விட்டு கிளம்பாமல் இருந்தது. இது ஏன்? என்ற தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை பயன்படுத்தி, கேரள சுற்றுலா கழகம் வாசகம் ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, ஒருமுறை வந்து விட்டால், கிளம்பி செல்வதற்கு மனமில்லாத அளவுக்கு இயற்கை வளம் நிறைந்தது கேரளா என விளம்பரப்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று காலை 10.50 மணியளவில் ஆஸ்திரேலியா நாட்டின் டார்வின் நகருக்கு அந்த விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கம் செய்யப்பட்டது என்றும் பராமரிப்பு பணிக்கு பின்னர் கிளம்பி சென்றுள்ளது என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒரு விமானம், ஏறக்குறைய ரூ.950 கோடி மதிப்பு கொண்டது.





















