மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா 2022ன் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை (NLEM) வெளியிட்டார். இந்த பட்டியலின் அடிப்படையில் NLEM 2022ல் 384 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் 34 புதிய மருந்துகள் ஆகும்.
இதுகுறித்து டாக்டர் பாரதி பிரவின் பவார் தெரிவிக்கையில், “NLEM பற்றிய பிரதமரின் பார்வை, குறைக்கப்பட்ட செலவுகளுடன் மலிவு சுகாதாரத்தை நோக்கிய மற்றொரு படி” இது மருந்துகளின் செயல்திறன், பாதுகாப்பு, தரம், மலிவு மற்றும் அணுகல் ஆகியவற்றை மேலும் உறுதி செய்யும் என கூறியுள்ளார். மேலும், ஆண்டி மைக்ரோபியல் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பங்குதாரர்கள் முன் வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த பட்டியலை வெளியிட்டு பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, "அத்தியாவசிய மருந்துகள்" செயல்திறன், பாதுகாப்பு, தரம் மற்றும் சிகிச்சையின் மொத்த செலவு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். NLEMன் முதன்மை நோக்கம், விலை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு மருந்துகளின் நியாயமான பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும். இது சுகாதார வளங்கள் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை உகந்த முறையில் பயன்படுத்த உதவுகிறது. மேலும், மருந்து கொள்முதல் கொள்கைகள், சுகாதார காப்பீடு, யுஜி/பிஜிக்கான மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி மற்றும் மருந்துக் கொள்கைகளை உருவாக்குதல் இதன் முதன்மை நோக்கம் என குறிப்பிட்டார்.
NLEMல், மருந்துகள் சுகாதார அமைப்பின் அளவை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. அதில் P- முதன்மை மருந்துகளாகவும், S- இரண்டாம் நிலை மருந்துகளாகவும் மற்றும் T- மூன்றாம் நிலை மருந்துகளாகவும் வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன.
மருந்து பட்டியல் முழு விவரம் :
தொடர்ந்து அவர் பேசுகையில், கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளின் வரையறுக்கப்பட்ட பட்டியல் சுகாதாரப் பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்தும், செலவு குறைந்த சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருந்துகளின் சிறந்த நிர்வாகத்தை வழங்கும் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் விரிவாகக் கூறினார். பொது சுகாதார முன்னுரிமைகள் மற்றும் மருந்து அறிவில் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வழக்கமான அடிப்படையில் திருத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார். அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் முதன்முதலில் 1996ல் உருவாக்கப்பட்டது. இது 2003, 2011 மற்றும் 2015 இல் மூன்று முறை திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என அவர் கூறினார்.
மேலும், 2018 ஆம் ஆண்டு மத்திய சுகாதார அமைச்சகத்தால் ஸ்டேண்டிங் நேஷனல் கமிட்டி (SNCM) அமைக்கப்பட்டது. நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைக்குப் பிறகு குழு NLEM, 2015ஐத் திருத்தி, NLEM, 2022 பற்றிய தனது அறிக்கையை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்திய அரசு கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று, பட்டியலை ஏற்றுக்கொண்டுள்ளது,'' என்றார். NLEM உருவாக்கும் செயல்முறையானது பங்குதாரர்களிடமிருந்து அறிவியல் ஆதாரங்கள் மற்றும் பின்பற்றப்படும் உள்ளடக்கம்/விலக்குக் கொள்கை ஆகியவற்றின் ஆதரவைப் பொறுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர், 2015ல் 376 அத்தியாவசிய மருந்துகள் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.